ராயர் பரம்பரை திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5/5.
நடிகர் & நடிகைகள் :- கிருஷ்ணா, சரண்யா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆர்என்ஆர் மனோகன், கிருத்திகா, அன்ஷுலா ஜிதேஷ் தவான், கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, ஷர்மிளா, பாவா லட்சுமணன், சேசு, மிப்பு, புலி தங்கதுரை, கல்லூரி வினோத், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராமநாத் டி.
ஒளிப்பதிவு :- விக்னேஷ் வாசு
படத்தொகுப்பு :- சசி குமார்.
இசை :- கணேஷ் ராகவேந்திரா.
தயாரிப்பு நிறுவனம் :- சின்னசாமி சினி கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- சின்னசாமி மௌனகுரு.
ரேட்டிங் :- 2.5./ 5.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ராயர் பரம்பரையை சேர்ந்த வில்லன் ஆனந்தராஜ் காதல் என்றால் பிடிக்காது அவர் வைத்ததுதான் சட்டம் என வாழ்ந்து வருகிறார்.
வில்லன் ஆனந்தராஜ் தங்கை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட தனது செல்ல மகள் கதாநாயகி சரண்யா நாயரை அந்த ஊரில் உள்ள ஆண்கள் யாரும் காதலித்து விடக்கூடாது என கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.
முகநூலில் தன் மகள் கதாநாயகி சரண்யா நாயரை ஒருவன் பின் தொடர்ந்த காரணத்தினால் இனிமேல் நீ முகநூலை பயன்படுத்தக் கூடாது என அவனது கையை சிதைத்து விடுகிறார்.
அதற்கேற்றாற் போல் ஜோதிடர் மனோபாலா உனது மகளின் திருமணம் காதல் திருமணமாகத்தான் நடக்கும் உன்னுடைய சம்மதத்துடன் நடக்கும் என கூறி விடுகிறார்.
வில்லன் ஆனந்தராஜிடம் ஜோதிடர் மனோபாலா தன் மகளை பற்றி கூறியதில் இருந்து முழு நேர வேலையே தனது மகள் யாரையும் காதலித்து விடக்கூடாது என அவள் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்கிறார்.
வில்லன் ஆனந்தராஜூக்கு காதலையும் பிடிக்காது காதலர்களையும் பிடிக்காது காதலிப்பவர்களையும் பிடிக்காது.
மொட்டை ராஜேந்திரன் கா.கா.பி.க என்ற கட்சியை நடத்திக் கொண்டு அந்த ஊரில் காதலிக்கும் காதலர்களைப் பிரிக்கும் வேலையை அப்படியே யாராவது காதலித்தாலும் அவர்களுக்கு இன்ஸ்டன்ட் தாலியைக் கொடுத்து திருமணமும் செய்து வைக்கிறார்.
காதல் ஜோடிகளை பிரிக்கும் வேலையை கா.கா.பி.க கட்சியின் தலைவர் மொட்டை ராஜேந்திரன் மூலம் மறைமுகமாக செய்து வருகிறார் வில்லன் ஆனந்தராஜ்.
அதே கட்சியில் கா.கா.பி.க கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் கதாநாயகன் கிருஷ்ணா காதலுக்கு எதிரியாக அவர் செயல்பட்டாலும் அவரை கதாநாயகிகள் கிருத்திகா சிங் மற்றும் அனுஷா தவான் இருவரும் துரத்தித் துரத்திக் காதலித்துக்
காதலிக்கிறார்கள்.
ஆனால், கதாநாயகிகள் கிருத்திகா சிங் மற்றும் அனுஷா தவான் இருவரின் காதலையும் ஏற்க மறுக்கிறார் கதாநாயகன் கிருஷ்ணா
இதற்கிடையே, தன் செல்ல மகள் கதாநாயகி சரண்யா நாயரை கதாநாயகன் கிருஷ்ணா காதலிப்பதாக நினைத்து அவரை கொலை செய்ய வில்லன் ஆனந்தராஜ் முடிவு செய்கிறார்.
கொலை செய்ய துடிக்கும் வில்லன் ஆனந்தராஜ்யிடம் இருந்து கதாநாயகன் கிருஷ்ணா தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா? வில்லன் ஆனந்தராஜ் தங்கையை கதாநாயகன் கிருஷ்ணா காதலித்து திருமணம் செய்தாரா? செய்யவில்லையா? என்பதுதான் இந்த ராயர் பரம்பரை திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ராயர் பரம்பரை திரைப்படத்தில் கதாநாயகனாக கிருஷ்ணா நடித்திருக்கிறார்.
கதாநாயகன் கிருஷ்ணா முதல் முதலாக காமெடி கதாபாத்திரத்தில் மிகவும் செம ஜாலியான நடித்திருக்கிறார்.
கதாநாயகன் கிருஷ்ணா மூன்று கதாநாயகிகளுடன் காதல் ஆடல் பாடல், நடனம், என்று திரைப்படம் முழுவதும் மிக மகிழ்ச்சியாக வலம் வருகிறார்.
தனது காமெடி நடிப்பின் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறார்.
கதாநாயகிகள் சரண்யா நாயர் கிருத்திகா சிங், அனுஷா தவான் என மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.
மூன்று கதாநாயகிகளும் தங்களுக்கு கொடுத்த வேலையை எந்த ஒரு குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
அப்படியே நடித்திருந்தாலும் திரைப்படம் முடிந்து வெளியே வந்தால் மூவரில் ஒருவரது முகம் கூட நம் நினைவில் நிற்கவில்லை.
கதாநாயகி சரண்யா நாயர் இந்த கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் நடுத்திருக்கிறார்.
ஆனந்தராஜ், தனது அனுபவமான நடிப்பு மூலம் வில்லனாக மிரட்டுவதோடு, காமெடி நடிகராக சிரிக்கவும் வைக்கிறார்.
கா.கா.பி.க கட்சியின் தலைவர் என்ற பெயரில் மொட்டை ராஜேந்திரன் திரைப்படம் முழுவதும் வந்தாலும், ஒரு சில காட்சிகளை தவிர்த்து பெரும்பாலான காட்சிகளில் நம்மை சிரிக்க வைப்பதற்கு பதிலாக எரிச்சலடைய செய்கிறார்.
கதாநாயகன் கிருஷ்ணாவின் நண்பர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத் மற்றும் தங்கதுரை சிறிது நேரம் வந்தாலும் மிக அருமையாக நினைக்கிறார்கள்.
இந்த இரண்டு பேரும் வரும் காட்சிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.
கதாநாயகன் கிருஷ்ணா தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளராக வரும் தயாரிப்பாளர் சின்னசாமி மெளனகுரு, திரைப்படம் முழுவதும் காமெடியாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.
இறுதியில் தனக்கு குழந்தை இல்லாத குறையை சொல்லி வருத்தப்படும் காட்சியில் கண் கலங்க வைத்து விட்டார்.
ஜோதிடராக வரும் மனோபாலா, ராயரின் வலது கையாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர், சேசு, ராமரின் தாயாக வரும் கே.ஆர்.விஜயா, ராயரின் தங்கையாக வரும் கஸ்தூரி, ஆகியோர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசுவின் கலர் புல்லான காட்சிகளை இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை தேடி பிடித்து ஒளிப்பதிவு மூலம் காட்சிப்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும், திரும்ப திரும்ப கேட்கும்படியும் இருக்கிறது.
பின்னணி இசை கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
கதாநாயகன் கிருஷ்ணாவின் தந்தையாக வரும் பவர் ஸ்டார் சீனிவாசன் சீமான் செங்கல்வராயன் யார்? என்பதை சொல்லும் காட்சியில் ஒட்டு மொத்த திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் சிரிப்பால் அதிர்ந்துவிடுகிறது.
காதல் கதையை முழுநீள நகைச்சுவை திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் ராமநாத்.டி.
சில இடங்களில் தடுமாற்றம் இருந்தாலும் தான் சொல்ல வந்ததை எந்தவித நெருடல் இல்லாமல் ரசிகர்கள் பார்க்க கூடிய வகையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராமநாத்.டி.
இந்த ‘ராயர் பரம்பரை’ திரைப்படத்தில் காமெடி காட்சிகள் இன்னும் கொஞ்சம் அதிகமாக திரைப்படம் முழுவதும் வைத்திருந்தால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும்.
மொத்தத்தில், ‘ராயர் பரம்பரை’- குடும்பத்தோடு பார்க்க கூடிய நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்திருக்கிறது.











