ஹிட் லிஸ்ட் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, அனுபமா குமார், ராமச்சந்திர ராஜு, முனீஷ்காந்த், ராமச்சந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பாலசரவணன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சூர்யகதிர் காக்கல்லர்-கே.கார்த்திகேயன்.
ஒளிப்பதிவாளர் :- கே.ராம்சரண்.
படத்தொகுப்பாளர் :- ஜான் ஆபிரகாம்.
இசையமைப்பாளர் :- சி.சத்யா.
தயாரிப்பு நிறுவனம் :- ஆர்.கே. செல்லுலாயிட்ஸ்.- ஆர்.ஜி.சி- ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- இயக்குனர்’ கே.எஸ். ரவிக்குமார்.
ரேட்டிங் 3.25/5.
கதாநாயகன் விஜய் கனிஷ்கா தனது தந்தையை இழந்த நிலையில் தாய் சித்தாரா, மற்றும் தங்கை அபி நட்சத்திரா என அமைதியாக குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் விஜய் கனிஷ்கா இந்த ஒரு சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என வாழ்ந்து வரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரின் கொள்கைகளை கடைபிடித்து கொண்டு வாழும் கதாநாயகன் விஜய் கனிஷ்கா.
ஒரு நாள் திடீரென கதாநாயகனின் தாய் சித்தாரா, மற்றும் தங்கை அபி நட்சத்திரா, முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் இருவரையும் கடத்தி விடுகிறார்.
காவல்துறை அதிகாரியான சரத்குமார் நேரடியாக களத்தில் இறங்கி இந்த கடத்தல் விஷயத்தை விசாரிக்க செய்கிறார்.
தாய் தங்கையே கடத்திய முகமூடி அணிந்த மர்மநபர் சிறு எறும்பு உயிரைக் கூட கொலை செய்து விடக்கூடாது என கொள்கையுடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் விஜய் கனிஷ்காவை மிரட்டி முகமூடி அணிந்த மர்மநபர் இரண்டு கொலைகளைச் செய்யச் சொல்கிறான்.
அந்த முகமூடி அணிந்த மர்மநபர் யார்? அந்த மர்மநபர் எதற்காக சிறு உயிரை கூட கொல்லக்கூடாது என கொள்கையுடன் வாழும் கதாநாயகன் விஜய் கனிஷ்காவை கொலை செய்யச் சொல்கிறான்? அந்த முகமூடி அணிந்த மர்மநபரிடம் இருந்து எப்படி கதாநாயகன் விஜய் கனிஷ்கா தனது தாய் மற்றும் தங்கை, இருவரையும் காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா?
காவல்துறை அதிகாரியான சரத்குமார் அந்த முகமூடி அணிந்த நபரை கைது செய்தாரா? கைது செய்யவில்லையா? என்பதுதான் இந்த ஹிட் லிஸ்ட். திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தில் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விஜய் கனிஷ்கா அப்பாவித்தனமான முகத்துடன், பயந்த சுபாவமான, தாய் தங்கையை காப்பாற்ற போராடும் கதாபாத்திரத்தில் தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வரும் இயக்குநர் விக்ரமனின் மகன் என்பதை நடிப்பின் மூலம் நிரூபித்துள்ளார்.
கதாநாயகன் விஜய் கனிஷ்காவிற்கு தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என இந்த ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் நடிப்பு சண்டை காட்சிகள் மூலம் நிரூபித்திருக்கிறார்.
கதாநாயகன் விஜய் கனிஷ்கா அறிமுகமான திரைப்படத்தில், தமிழ் திரைப்படம் உலகில் மிகப்பெரிய இயக்குனரின் மகன் என்பதால் காதல், காட்சிகள் பாடல் காட்சிகள் என கதைக்கு தேவையில்லாத விஷயங்கள் திணிக்காமல் கொடுத்திருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
காவல்துறை அதிகாரியாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இடை வேலைக்கு பிறகு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான சமுத்திரக்கனி அவர்களின் வருகை ரசிகர்களுக்கு சர்ப்ரைசாகவே இருந்தது.
குறைந்த நேரம் வந்தாலும் நிறைவான நடிப்பையும், முக்கியமான கதாபாத்திரமாகவும் வருகிறார்.
கதாநாயகன் விஜய் கனிஷ்காவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விஜய் கனிஷ்கா அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தாரா அனுப்வ நடிப்பை கொடுத்துள்ளார்.
கதாநாயகன் விஜய் கனிஷ்கா தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபி நட்சத்திரா மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
காளி கதாபாத்திரத்தில் ராமசந்திர ராஜு மிகவும் நேர்த்தியாக மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
டாக்டர் கதாபாத்திரத்தை நடித்திருக்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் ஒரு சில காட்சிகள் வந்தாலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா தொடக்கத்தில் வரும் காட்சிகள் ஒன்றும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.
அனுபமா குமார், முனிஷ் காந்த், ராமச்சந்திரன் ரெடின் கிங்ஸ்லி,
பால் சரவணன், லதா ராவ், திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் ராம் சரணின் மிகவும் சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் ராம் சரணின் ஒளி பதிவின் மூலம் சண்டை காட்சிகளை மிக அழகாக கையாண்டுள்ளார்.
இசையமைப்பாளர் சி. சத்யாவின் பின்னணி இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலம் வாய்ந்ததாக இருக்கிறது.
திரைபடத்தின் மைனசாக இருப்பது முக்கிய கதாபாத்திரமான முகமூடி அணிந்த மர்மநபரின் நடிப்பு உடல்மொழி ஆங்காங்கே அந்நியன் திரைப்படத்தில் நடித்த சியான் விக்ரம் நினைவுக்கு கொண்டு வருகிறது.
அறிமுக இயக்குனரான சூர்யகதிர் காக்கள்ளார் மற்றும் கார்த்திகேயன் விறுவிறுப்பான கதைக்களத்தை தேர்வு செய்து மிக சிறப்பாக திரைக்கதையை அமைத்து மிக அருமையாக இயக்கியுள்ளனர்.
மொத்தத்தில் – ஹிட் லிஸ்ட் திரைப்படம் ஒரு உயிர் துடிப்பதை பார்த்து துடிக்கும் அந்த உயிரே புனிதமானது என்ற தத்துவத்தை உரக்கச் சொல்லும் ஹிட் லிஸ்ட் திரைப்படம் குடும்பத்துடன் சென்று ரசித்து பார்க்கக் கூடிய திரைப்படம்.