கிக் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 1.25/5.

நடிகர் & நடிகைகள் :- சந்தானம், தன்யா ஹோப், ரகினி தீவோதி, பிரம்மானந்தம், தம்பி ராமையா, மன்சூர் அலிகான், மனோ பாலா, கோவை சரளா, செந்தில், வையாபுரி, Y.G.மகேந்திரன், கூல் சுரேஷ், சாது காகிலா, கிங் காங், சேஷு, முத்து காளை, ஷகிலா, சிசர் மனோகர், அந்தோனி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பிரசாந்த் ராஜ்.

ஒளிப்பதிவு :- சுதாகர் S.ராஜ் .

படத்தொகுப்பு :- நகூரான்
ராமச்சந்திரன்.

இசையமைப்பாளர் :- அர்ஜுன் ஜன்யா.

தயாரிப்பு நிறுவனம் :- ஃபார் டூன் ஃபில்ம்ஸ் – YMR கிரியேட்டர்ஸ்.

தயாரிப்பாளர் :- நவீன் ராஜ்.

ரேட்டிங் :- 1.25/5.

ஒய் ஜி மகேந்திரன் மகன் தம்பி ராமையா நடத்தி வரும் விளம்பர கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் கதாநாயகன் சந்தானம்.

அதுபோல் மனோபாலா மற்றும் கோவை சரளா நடத்தி வரும் விளம்பர கம்பெனியில் கதாநாயகி தான்யா ஹோப் வேலை பார்த்து வருகிறார்.

கதாநாயகன் சந்தானம் மற்றும் கதாநாயகி தான்யா ஹோப் இருவருக்கும் விளம்பரம் படம் எடுப்பதற்கு பெரிய கம்பெனியை பிடிப்பதில் போட்டி ஏற்படுகிறது.

ஒரு மிகப்பெரிய கார் கம்பெனி விளம்பரத்திற்காக கதாநாயகன் சந்தானம் அந்த கம்பெனியில் மார்க்கெட்டிங் ஹெட் செந்தில் உங்கள் விஷயத்தில் வீக்கானவர் அதை பயன்படுத்தி கோல்மால் செய்து விளம்பரத்தை பிடிக்கிறார்.

இதனால் அசிங்கப்படும் கதாநாயகி தான்யா ஹோப், அட்வெர்டைசிங் கவுன்சிலில் கதாநாயகன் சந்தானம் பணிபுரியும் கம்பெனி மீது புகார் கொடுக்கிறார்.

அதன்பின் கதாநாயகி தான்யா ஹோப்பை நேரில் பார்க்கும் கதாநாயகன் சந்தானம் அவர் மீது காதல் வயப்படுகிறார்.

கதாநாயகி தான்யா ஹோப்பிடம் வேறொரு பெயரில் பழகி, தன்னுடன் காதல் வயப்பட வைக்கிறார் கதாநாயகன் சந்தானம்.

உண்மையாகவே காதலிக்கத் தொடங்கும் கதாநாயகன் சந்தானம் ஒரு கட்டத்தில் உண்மையை கூறி விட வேண்டும் என்று முயற்சிக்கும் நேரத்தில், தான் ஏமாற்றப்பட்டு இருக்கிற விஷயம் தெரிந்து மனமுடைகிறார் கதாநாயகி தான்யா ஹோப்.

இறுதியில் கதாநாயகன் சந்தானம், கதாநாயகி தான்யா ஹோப் காதலில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? ஒன்று சேரவில்லையா? என்பதுதான் இந்த கிக் திரைப்படம்தான் என்பதே மீதிக்கதை.

இந்த கிக் திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகனாக நடித்து இருக்கும் சந்தானம் வழக்கம்போல் டைமிங் காமெடி, பாடிலேங்குவேஜ் என குறைவே இல்லாமல் நடித்திருக்கிறார்.

இந்தக் திரைப்படத்தில் கதாநாயகியாக தான்யா ஹோப் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்து இருக்கும் தான்யா ஹோப் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

தம்பி ராமையா மைக்கேல் ஜாக்சன் பெயரை வைத்துக்கொண்டு மைக்கேல் ஜாக்சன் கேவலப்படுத்தி அவரைப் போல் இமிடேட் செய்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறார்.

அதுபோல் கோவை சரளா ரீல்ஸ் போடுகிறேன் என்று திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கதற வைத்து இருக்கிறார்.

மனோபாலா, மன்சூர் அலிகான், செந்தில், வையாபுரி, Y.G.மகேந்திரன், கூல் சுரேஷ், சாது காகிலா, கிங் காங், சேஷு, முத்து காளை, சிசர் மனோகர்,ஷகிலா, அந்தோனி, உள்ளிட்ட பலர் காமெடி என்ற பெயரில் ரசிகர்களை சோதித்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா. பழைய காலத்து திரைப்படங்களின் உள்ள பின்னணி இசையை இந்த கிக் திரைப்படத்தில் மிகவும் மட்டரகமாக போட்டு இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சுதாகர் S.ராஜ்  ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராஜ்.

காமெடி திரைப்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் காமெடி கேவலப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராஜ்.

ஆனால், காமெடி திரைப்படத்தில் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை

திரைப்படம் முழுக்க டபுள் மீனிங் வசனங்களை காமெடி என்றே பெயரில் இயக்குனர் பிரசாந்த் ராஜ் திணித்திருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகம் ஆஸ்கார் நோக்கி சென்று கொண்டிருக்கும் இப்படிப்பட்ட நேரத்தில் இந்த மாதிரி கிக் போன்ற திரைப்படங்கள் வந்தால் தமிழ் திரைப்பட உலகம் கோடம்பாக்கத்தை தாண்டாது என்பது உறுதி.

மிகவும் மட்டமான திரைப்படத்தை இயக்கிய இருக்கும் இயக்குனர் பிரசாந்த் ராஜ் மிகப்பெரிய வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் கிக் திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க முடியாத ஒரு திரைப்படம் டபுள் மீனிங் டயலாக்கை வைத்து காமெடி என்ற பெயரில் காமெடியை கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.

error: Content is protected !!