N4 திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5 / 5.

நடிகர் & நடிகைகள் :- மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செல்லஸ், வினுஷா தேவி, அனுபமா குமார், அப்சல் ஹமீது, அக்‌ஷய் கமல், சுவாதி, வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :-லோகேஷ் குமார்.

ஒளிப்பதிவு :- திவ்யாங்க்,

படத்தொகுப்பு :-  டானி சார்லஸ்,

இசை :- பாலசுப்ரமணியன் ஜி.

தயாரிப்பு நிறுவனம் :-  தர்மராஜ் பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- நவீன் சர்மா,
லோகேஷ் குமார்.

ரேட்டிங் :- 2.5 / 5.

வடசென்னை என் 4 துறைமுகத்தை சுற்றியுள்ள காசிமேடு பகுதிகளில் நடக்கும் கதைக்களம் தான் இந்த என் 4 திரைப்படம்.

N4 காவல்நிலையத்தின் பெயரை திரைப்படத்திற்கு வைத்திருப்பதால் இந்தத் திரைப்படம் காவல்துறை பற்றிய படமாக இருக்கும் என நினைத்தால் அதுதான் இல்லை.

காசிமேடு பகுதியில் வாழ்ந்து வரும் மக்களை பற்றிய செல்லும் இநத என 4 திரைப்படம்.

காசிமேடு பகுதியில் மீனவ குப்பத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செல்லஸ், வினுஷா தேவி, அப்சல் ஹமீது
ஆகிய தாய் தகப்பனை இழந்த நான்கு பேரையும் வளர்ப்பு பிள்ளைகளாக வடிவுக்கரசி வளர்ந்து வருகிறார்.

காசிமேடு மீனவ குப்பத்தில் மீன் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி கொண்டு நான்கு பேரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செல்லஸ், காதலிக்க வினுஷா தேவி, அப்சல் ஹமீது காதலிக்க இவர்கள் நான்கு பேரும் மிக மிக சந்தோசப் பறவைகளாக வலம் வருகிறார்கள்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அக்‌ஷய் கமல் தனது நண்பர்களுடன் அடிக்கடி N4 காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது கஞ்சா அடிப்பது என சந்தோசமாக இருந்து வருகிறார்கள்.

ஒரு நாள் இரவு காட்சி திரைப்படம் பார்த்துட்டு வரும்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு வினுஷா தேவியின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்கிறது.

தற்செயலாக துப்பாக்கி குண்டு பாய்ந்த வினுஷா தேவி உயிருடன் இருக்கிறாரா? இல்லை இறந்துவிட்டாரா?

விஷ்ணு தேதியை துப்பாக்கியால் சுட்டது யார் காவல்துறை கண்டுபிடித்ததா? கண்டுபிடிக்கவில்லையா?

இறுதியில் என்ன நடந்தது? என்பதுதான் இந்த என 4 திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த என்4 திரைப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடித்திருக்கிறார்.

மீனவர் குப்பத்தில் உள்ள ன மக்களின் வாழ்வியலை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.

மைக்கல் தங்கதுரையின் இயல்பான நடிப்பு அம்மக்களின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளது.

கேப்ரியல்லா செல்லஸ்,   கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

எதார்த்த வசன மொழியால் கைத்தட்டல் பெறுகிறார்.

அஃப்சல் ஹமீது மற்றும் வினுஷா தேவி இருவரும் இப்படிப்பட்ட ஒரு கதைக்கு அருமையான தேர்வு.

வடிவுக்கரசி அவருடைய முதிர்ச்சியான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.

வடிவுக்கரசியின் கணவராக வரும் அழகு ஒரு சில காட்சிகள் வந்தாலும் மனதில் பதிகிறார்.

.கண்ணம்மாவாக வரும் வடிவுக்கரசி மறைந்த காந்திமதியை நமக்கு நினைவு படுத்துகிறார்.

காவல்துறை ஆய்வாளராக வரும் அனுபமா குமார் சோகமான முகத்துடன் திரைப்படம் முழுவதும் அருமையாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் திவ்யாங்க். வடசென்னை மக்களின் வாழ்வியலை மற்றும் படகுகள் மீன்பிடி துறைமுகம் எப்படி இருக்குமோ என முடிந்த அளவுக்கு சிறப்பாக காட்சிப்படுத்த முயற்சி செய்துள்ளார்

இசையமைப்பாளர் பால சுப்பிரமணியத்தின் பின்னணி இசை ஓகே, பாடல்களில் இன்னும் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்தியிருக்கலாம்.

பணம் மற்றும் பதவி செல்வாக்கு உள்ளவர்களிடம் ஏழை மக்கள் எவ்வாறு பலிகடா ஆக்குகிறார்கள் என்பதை படத்தின் மூலம் சிறப்பாக கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் குமார்.

சின்ன பட்ஜெட்டில் முடிந்த அளவிற்கு அவரின் உழைப்பு கொடுத்து திரைப்படத்தை அழகாக வடிவமைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் குமார்.

வடசென்னை மக்கள் வாழ்வேளை கதையாக யோசித்த இயக்குனர் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி ஒருசில காட்சிகளை நீக்கி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் என்4 – பார்க்கலாம்.

error: Content is protected !!