ராவணக்கோட்டம் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5/ 5.

நடிகர் நடிகைகள் :- சாந்தனு பாக்யராஜ், இளைய திலகம்’ பிரபு, இளவரசு, ஆனந்தி, சஞ்சய் சரவணன், தீபா சங்கர், அருள்தாஸ், தேனப்பன், சுஜாதா சிவகுமார், முருகன், சத்யா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விக்ரம் சுகுமாரன்.

ஒளிப்பதிவு :- வெற்றிவேல் மகேந்திரன்.

படத்தொகுப்பு :-  லாரன்ஸ் கிஷோர்.

இசை :- ஜஸ்டின் பிரபாகரன்.

தயாரிப்பு நிறுவனம் :-  கண்ணன் ரவி குரூப்.

தயாரிப்பாளர் :- கண்ணன் ரவி.

ரேட்டிங் :- 3.5/ 5.

தமிழ் திரைப்பட உலகில் மதயானைக் கூட்டம்  திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விக்ரம் சுகுமாறன் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவரது இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி உள்ள திரைப்படம் ராவண கோட்டம்.

ஏனாதி கிராமத்தில் உள்ள மேலத்தெருவில் பிரபு தலைவராகவும் மற்றும் கீழத்தெருவில் இளவரசு தலைவராகவும் இரண்டு தெருவுக்களையும் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலத் தெருவை சேர்ந்த கதாநாயகன் சாந்தனுவும், கீழத்தெருவை சேர்ந்த சஞ்சய் சரவணனும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வரும் கதாநாயகி ஆனந்தியை கதாநாயகன் சாந்தனு காதலித்து வருகின்றனர்.

கதாநாயகன் சாந்தனுவும் கதாநாயகி ஆனந்தியும் இருவரும் காதலிக்கும் விஷயம் தெரியாத சஞ்சய் சரவணன் கதாநாயகி ஆனந்தியை இவர் மட்டும் ஒருதலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார்.

ஒரு கட்டத்தில் கதாநாயகன் சாந்தனு, கதாநாயகி ஆனந்தி இருவரும் காதலிக்கும் விஷயம் சஞ்சய் சரவணனுக்கு தெரியவர சிறு வயதிலிருந்து இருக்கும் நட்புக்குள் மிகப்பெரிய அளவில் பிளவு ஏற்படுகிறது.

அரசியல் சுயலாபத்துக்காக ஏனாதி கிராமத்தில் உள்ள இருவேறு சமூகத்தினரிடையே பிரிவினை ஏற்படுத்தும் முயற்சி அந்த ஊர் எம் எல் ஏ மற்றும் அமைச்சரும் தீவிர படுத்துகிறார்கள்.

இறுதியில் கதாநாயகன் சாந்தனு கதாநாயகி ஆனந்தி இவர்கள் காதல் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இருவேறு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட்டதா? ஏற்படவில்லையா? என்பதுதான் இந்த ராவண கோட்டம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ராவணக்கோட்டம் திரைப்படத்தில் கதாநாயகனாக சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ளார்.

கதாநாயகன் சாந்தனு,நட்பு தைரியம் காதல் ஆக்க்ஷன் சென்டிமென்ட் ஆக்ரோஷம் கலந்த யதார்த்தமான நடிப்பில் ரசிகர்களுடைய கைதட்டல் பெறுகிறார்.

இந்த ராவண கூட்டம் திரைப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் உழைத்திருக்கிறார் சாந்தனு பாக்யராஜ்.

கதாநாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார்.

கதாநாயகி ஆனந்தி, வெகுளித்தனமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

காதல் காட்சிகளில் துறுதுறு பெண்ணாக நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார்.

கதாநாயகி ஆனந்தி ஒவ்வொரு காட்சிகளிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறார்.

மேலத்தெரு மக்களுக்காக வாழ்ந்து வரும் பிரபுவின் அனுபவ நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

கீழத்தெரு மக்களுக்காக வாழ்ந்து வரும் இளவரசும் மிக அற்புதமாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மேலத்தெரு கீழத்தெரு இரண்டு தெரு மக்களுக்காக இருவரும் தலைமை ஏற்று இரண்டு தடவை மக்களிடையே சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் வழி நடத்துகிறார்கள்.

சஞ்சய் சரவணன் புதுமுக நடிகர் போல் இல்லாமல் நடித்திருப்பது மிகச் சிறப்பாக இருக்கிறது.

அமைச்சராக வரும் பி.எல்.தேனப்பன், எம்.எல்.ஏ.வாக வரும் அருள்தாஸ், தீபா சங்கர் ஆகியோரின் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

ஒத்த கை கதாபாத்திரத்தில் வரும் முருகன், மற்றும் அவருக்கு உதவியாளராக வரும் சத்யா ஆகியோர் சிறந்த கதாபாத்திரம் தேர்வு அருமை.

இருவரின் நடிப்பையும் வெகுவாக பாராட்டியாக வேண்டும்.

அனைத்து கதாபத்திரங்களிடையே மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு கிராமத்தை கண் முன் நிறுத்தி விட்டார்.

கருவேல மரங்கள் சூழ்ந்த நிலப்பரப்பினை ஒளிப்பதிவு அழகாக காட்சி படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையில் திரைப்படத்தின் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்.

சீமைக் கருவேல மர பிரச்சினை, கார்ப்ரேட் மாஃபியா, அரசியல், காதல், நட்பு என திரைப்படத்தை மிகவும் அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

சொல்ல வந்த விஷயத்தை மிகத் தெள்ளத் தெளிவாக சொல்லி உண்மையை உரக்க கூறிய இயக்குனர் விக்ரம் சுகுமாரனுக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் இராவண கோட்டம் திரைப்படம் மிக அருமையான திரைப்படம்.

error: Content is protected !!