பீட்சா 3 திரைவிமர்சனம் ரேட்டிங் :- 1.75./ 5.

நடிகர் & நடிகைகள் :- அஸ்வின் காக்குமானு, பவித்ரா மாரிமுத்து, கௌரவ் நாராயணன், கவிதாபாரதி, அனுபமா குமார், அபி நட்சத்திரா, வீரா, குராஷி, காளி வெங்கட், கேபி யோகேஷ், செய்மூர், விநாயகர் ராஜ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மோகன் கோவிந்த்.

ஒளிப்பதிவு :- பிரபு ராகவ்.

படத்தொகுப்பு :- இக்னேஷியஸ் அஸ்வின்.

இசை :- அருண்ராஜ்.

தயாரிப்பு நிறுவனம் :-  திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்.

தயாரிப்பாளர் :- சி.வி. குமார்.

ரேட்டிங் :- 1.75./ 5.

புதிதாக ஒரு ஹோட்டல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார் கதாநாயகன் அஸ்வின்

அந்த ஹோட்டலுக்கு சாப்பிட வந்த கஸ்டமர் ஒருவர் மம்மி உருவம் கொண்ட பொம்மை ஒன்றை அங்கேயே விட்டுச் சென்றுவிடுகிறார்.

மம்மி உருவம் கொண்ட அந்த பொம்மை வந்ததிலிருந்து இதை அடுத்து அங்கே தொடர்ந்து அமானுஷ்ய சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

அமானுஷ்ய சம்பவங்கள் நடபது இது ஒருபுறம் இருக்க ஆவிகளிடம் பேசும் மொபைல் ஆப் தயாரிக்கும் ஆராய்ச்சியாளர் கதாநாயகி பவித்ரா மாரிமுத்து.

ஆனால் காவல்துறை அதிகாரி கௌரவ் நாராயணன் இவர்கள் இருவருடைய காதலுக்கு எதிரியாகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் கதாநாயகனை சுற்றி தொடர்ந்து கொலைகளும் அமானுஷ்யங்களும் நடந்து கொண்டே இருக்கிறது.

இந்தக் கொலைகள் எதனால் நடக்கிறது? நடக்கும் கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதுதான் இந்த பீட்சா 3 திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பீட்சா 3 திரைப்படத்தில் அஸ்வின் ககுமானு கதாநாயகனாக நடித்துள்ளார்.

அர்ஜுன் கதாபாத்திரத்திம் அஸ்வின் ககுமானு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அஸ்வின் சுகுமானு தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி நடிப்பு திறமையை காட்டியுள்ளார்.

நடக்கும் கொலைகளுக்கு எல்லாம் தான் காரணம் என தெரிந்தவுடன் நடிப்பின் மூலம் அவருடைய கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார்.

இந்த பீட்சா 3 திரைப்படத்தில் கதாநாயகியாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார்.

கதாநாயகி பவித்ரா மாரிமுத்துவும் சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளார்.

அபி நட்சத்திரா அருமையான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

அனுபமா குமார் ஒரு தாயாக மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்.

காவல்துறை அதிகாரியாக வரும் கௌரவ் நாராயணன் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

வீரா, குராஷி, காளி வெங்கட், கேபி யோகேஷ், செய்மூர், விநாயகர் ராஜ் கே பி ஒய் யோகி அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் வேலைகளை அருமையாக செய்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் மீண்டும் மீண்டும் வரும் ஒரே மாதிரியான காட்சிகளை கத்திரி போட்டிருக்கலாம் கத்திரி இருப்பதை மறந்து விட்டாரோ என்ன.

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ். ஒளிப்பதிவு திரைப்படத்திற்க்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

கதைக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் பயணித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ்
ஒளிப்பதிவில் இருள் நிறைந்த காட்சிகளில் மெனக்கெட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் அருண்ராஜ்.இசை பிண்ணனி இசை அனைத்தும் அருமையாக இருக்கிறது.

இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக முதல் பாதியில் திக்கு திசையின்றி நகர, இரண்டாம் பாதியில் வழக்கமான பழிவாங்கும் கதையாக முடிகிறது.

சிறுமிகளிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபடுபவர்களில் பலர் அந்த சிறுவன் சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் மற்றும் நல்ல தெரிந்தவர்களாகதான் இருக்கிறார்கள் என்ற சமூகம் சார்ந்த பிரச்சனையை பீட்சா 3 கதையாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் மோகன் கோவிந்த்.

மொத்தத்தில் பீட்சா 3 திரைப்படம்
அரைத்த அதே மாவிலே சுடப்பட்டு இருப்பதால் இந்த ‘பீட்சா 3’  ருசிக்க முடியவில்லை.

error: Content is protected !!