பிதா 23:23 திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஆதேஷ் பாலா, சாம்ஸ், ஸ்ரீராம் சந்திரசேகர், மாரிஸ் ராஜா, மாஸ்டர் தர்ஷித், நடிகை ரிஹானா, அனு கிருஷ்ணா, சிவஞ்சி அருள்மணி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ்.சுகன்.
ஒளிப்பதிவாளர் :- இளையராஜா.
படத்தொகுப்பாளர் :- ஸ்ரீவர்சன்.
இசையமைப்பாளர் :- நரேஷ்.
தயாரிப்பு நிறுவனம் :- எஸ்.ஆர். பிலிம் பேக்டரி.
தயாரிப்பாளர் :- ஜி.சிவராஜ்,.
ரேட்டிங் :- 2./5
ஊரில் உள்ள மிகப்பெரிய கோயிலில் மிகவும் கோலாகலமாக திருவிழா நடந்துகொண்டு இருக்கிறது.
இரவு நேரத்தில் அதிக அளவில் கூட்டமாக இருக்க அதில், கதாநாயகி பிதாலெஷ்மி காணாமல்போன வாய் பேச முடியாமல் காதுக்கு கேட்காமல் இருக்கும் தன் தம்பியைத் தேடிச் செல்கிறாள்.
இது ஒரு புறம் இருக்க, கோடீஸ்வரர்களைக் கடத்தி அவர்களின் குடும்பத்தாரிடம் மிரட்டி பணம் பறிக்கும் ஒரு கும்பல் கோடீஸ்வரர் ஒருவரை கடத்திவைத்து கொண்டு அவரது மனைவியிடம், 25 கோடி ரூபாயை கேட்டு மிரட்டி கொண்டிருக்க அந்தக் கடத்தல் கும்பலிடம் கதாநாயகி பிதாலெஷ்மி சிக்கிக் கொள்கிறாள்.
கதாநாயகி பிதாலட்சுமி அந்தக் கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா? காணாமல் போன கதாநாயகி பிதாலட்சுமியின் தம்பி கிடைத்தாரா? கிடைக்கவில்லையா?
என்பதுதான் இந்த பிதா திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த பிதா திரைப்படத்தில் கதாநாயகியாக அனுகிருஷ்ணா நடித்திருக்கிறார்.
பிதாலெஷ்மி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுகிருஷ்ணா சிறப்பான நடிப்பை கொடுத்து உள்ளார்.
காணாமல் போன வாய் பேச முடியாத காது கேட்காத தனது தம்பியைத் தேடும் பதற்றம், அபாய சூழலில் சிக்கி தடுமாறுவது, காதலனிடம் காட்டும் நேசம் தம்பி மீது உள்ள பாசம் என பலவித உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆதேஷ்பாலா வில்லனாக மிரட்டி இருக்கிறார்.
கோடீஸ்வரரை கடத்தி பணம் பறிக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
காமெடி வில்லனாக வரும் சாம்ஸ் மற்றும் மாரிஸ் ராஜா இருவரும் சண்டை போடும் காட்சிகளில் கொஞ்சம் சுவாரஸ்யம் ஏற்படுத்துகிறார்.
கதாநாயகி பிதாலட்சுமியின் தம்பியாக சிறுவன் தர்ஷித். காது கேட்காத, வாய்பேச முடியாத சிறுவனாக வந்து கவனத்தை ஈர்க்கிறான்.
கோடீஸ்வரரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரெஹானா மிகவும் அசத்தலாக நடித்து உள்ளார்.
கடத்தப்பட்ட கோடீஸ்வரரின் கார் ஒட்டுநராக வரும் சிவாஞ்சியும் சிறப்பாக நடித்து உள்ளார்.
கதாநாயகி பிதா லெஷ்மி காதலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீராம் சந்திரசேகர், கோடீஸ்வரராக நடித்திருக்கும் அருள் மணி, என அனைவருமே கதாபாத்திரம் உணர்ந்து நடித்து உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் இளையராஜாவின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் நரேஷ் இசை மற்றும் பின்னணி இசை மிகவும் அருமையாக அமைந்திருக்கிறது.
இந்தப் பிதா திரைப்படத்தை 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுத்து முடித்து சாதனை படைத்துள்ளது இந்த பிதா திரைப்படக் குழுவினர்.
புதிய முயற்சி என்பதோடு ரசிக்க வைக்கும் திரைப்படத்தை அளித்த இயக்குநர் சுகனை பாராட்டலாம்.
மொத்தத்தில் இந்தப் பிதா திரைப்படம் ஓகே ரகம்.











