“எமன் கட்டளை” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- அன்பு மயில்சாமி, சந்திரிகா, அர்ஜுனன் ,ஆர்.சுந்தரராஜன், சார்லி, வையாபுரி, டெல்லி கணேஷ், சங்கிலி முருகன், பவர் ஸ்டார் சீனிவாசன், நளினி, ஷகிலா, லதாராவ்,கொட்டாச்சி, கராத்தே ராஜா, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ்.ராஜசேகர்.
ஒளிப்பதிவாளர் :- ஏ.கார்த்திக் ராஜா.
படத்தொகுப்பாளர் :- சரவணகுமார்.
இசையமைப்பாளர் :- என்.சசிகுமார்.
தயாரிப்பு நிறுவனம் :- செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ்.
தயாரிப்பாளர் :- எஸ்.ஏ.கார்த்திகேயன்.
ரேட்டிங்:- 2.5./5.
கதாநாயகன் அன்பு மயில்சாமி, மற்றும் அர்ஜுனன், நண்பர்கள் இருவரும் திரைப்பட உலகில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் கதாநாயகன் அன்பு மயில்சாமி, பல தயாரிப்பாளர்களிடம் இயக்குனராக வேண்டும் என வாய்ப்பு தேடி அலைந்தும் எந்த ஒரு பலனும் இல்லாமல், தானே திரைப்படத்தினை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்து, பணத்திற்காக திருட்டில் ஈடுபடுகிறார்கள்.
கதாநாயகன் அன்பு மயில்சாமி,
மற்றும் அர்ஜுனன்,
இனைத்து ஒரு திருமண மண்டபத்தில் நுழைந்து பணம் மற்றும் நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்து விடுகிறார்கள்.
கதாநாயகன் அன்பு மயில்சாமி, மற்றும் அர்ஜுனன், இவர்களின் திருட்டுத்தனத்தால் திருமணம் நடக்க இருந்த கதாநாயகி சந்திரிகாவின் திருமணம் நின்று விடுகிறது.
இந்த நிலையில் கதாநாயகி சந்திரிகா மற்றும் அவருடைய தந்தை டிபி கஜேந்திரன் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள
இதை அறிந்த கதாநாயகன் அன்பு மயில்சாமி, மற்றும் அர்ஜுனன் கதாநாயகன் அன்பு மயில்சாமி தான் செய்த செயலை மனம் வருந்தி அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டு எமலோகம் செல்கிறான்.
எமலோகத்துக்கு சென்ற கதாநாயகன் அன்பு மயில்சாமி
அங்குள்ள எமதர்மராஜா கட்டளை ஒன்று இடுகிறார்.
அந்த கட்டளைப்படி நீ செய்த தப்புக்கு உப்பை தின்னவன் தான் தண்ணீர் குடிக்கனும், அதனால் நீ தான் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து அதுவும் 60 நாட்களுக்குள் மணமுடித்து வைக்க வேண்டும் என எமதர்மராஜா கூறுகிறார்.
எமலோகத்தில் இருந்து
பூலோகம் வந்த கதாநாயகன் அன்பு மயில்சாமி தன் நண்பன் அர்ஜுனன் சேர்ந்து கதாநாயகி சந்திரிகா பல மாப்பிள்ளைகள் தேடி அலைகிறார்கள்.
இதற்கிடையில் கதாநாயகி சந்திரிகா தாய்மாமன் எப்படியாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான்.
அந்த கதாநாயகி சந்திரிகா கதாநாயகன் அன்பு மயில்சாமி மீது காதல் கொள்கிறாள்.
ஆனால் கதாநாயகன் அன்பு மயில்சாமி விலகி விலகி ஓடுகிறான்.
இந்த நிலையில் 59 நாட்கள் முடிந்து 60 வது நாளும் பிறக்கிறது.
எமன் கட்டளைப்படி கதாநாயகி சந்திரிகாக்கு கதாநாயகன் அன்பு மயில்சாமி மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்காளா? திருமணம் செய்து வைக்கவில்லையா ? என்பதுதான் இந்த எமன் கட்டளை திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த எமன் கட்டளை திரைப்படத்தில் கதாநாயகனாக அன்பு மயில்சாமி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் அன்பு மயில்சாமி நடிப்பு மற்றும் நடனம் சண்டைக்காட்சி அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
இந்த எமன் கட்டளை திரைப்படத்தில் கதாநாயகியாக சந்திரிகா நடித்துள்ளார்.
கதாநாயகிகளாக, நடித்திருக்கும் சந்திரிகா பல காட்சிகளுக்கு அழகாகவும் நடிப்பில் அளவாகவும் நடிப்பை கொடுத்து திரைப்படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
அர்ஜுனன், ஆர்.சுந்தரராஜன்,
சார்லி, வையாபுரி, டெல்லி கணேஷ், சங்கிலி முருகன்,
பவர் ஸ்டார் சீனிவாசன்,
நளினி , ஷகிலா, லதாராவ், கொட்டாச்சி, கராத்தே ராஜா, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா, என அனைவரும் திரைப்படத்தில் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை ஒளிப்பதிவு மூலம் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் என் எஸ் கே இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
வித்தியாசமான கதையை கையில் எடுத்து வித்தியாசமான திரைக்கதை அமைத்து தனது அருமையான இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் ராஜசேகர்.
மொத்தத்தில் எமன் கட்டளை திரைப்படம் ஒகே.











