“ராஜபுத்திரன்” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் – பிரபு ,வெற்றி, கிருஷ்ணபிரியா, மன்சூர் அலிகான், ஆர்.வி. உதயகுமார், கோமல் குமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, தங்கதுரை, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் – மகா கந்தன்.
ஒளிப்பதிவாளர் – ஆலிவர் டெனி
படத்தொகுப்பாளர் –
இசையமைப்பாளர் – எஐஎஸ் . நௌஃபல் ராஜா.
தயாரிப்பு நிறுவனம் – கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் – K.M சபி, T. பாரூக்கு, K. கோதர்ஷா.
ரேட்டிங் – 3.5/5.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிரபுக்கு இரண்டு குழந்தைகள் மகன் கதாநாயகன் வெற்றி மற்றும் மகள் இருவரையும் தாய் இல்லாமல் வெற்றியை அதிக அளவு பாசத்துடன் வந்து தருகிறார்.
கதாநாயகன் வெற்றியின் தந்தை பிரபு தனது மகன் கதாநாயகன் வெற்றியை எங்கும் எந்த வேலைக்கு அனுப்பாமல், தன்னுடைய ஊரிலேயே தனது கண் பார்வையிலேயே இருக்கும்ப்படி வளர்த்து வருகிறார்
கதாநாயகன் வெற்றியின் தந்தை பிரபு ஊரில் விவசாயம் என்பது இல்லாமல் போய்விட, வட்டிக்கு பணம் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
தன் தந்தையின் கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத கதாநாயகன் வெற்றி, தந்தைக்கு தெரியாமல் வில்லன் கோமல் குமாரிடம் வேலைக்குச் சேர்கிறார்.
இந்த கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார்கள், தங்களது குடும்பத்திற்கும் அனுப்பும் பணத்தை வரிகட்டாமல் அனுப்பி வைக்க நினைப்பவர்களின் வில்லன் கோமல் குமார் பணத்தை பெற்றுக் கொண்டு, அவரவர் வீட்டிற்கு அவர்களின் பணத்தைக் கொண்டு சேர்க்கும் வேலை பார்த்து வருகிறார்.
அந்த பணத்தை வில்லன் கோமல் குமாரிடம் பெற்றுக் கொண்டு, அதை கவனமாக குடும்பங்களுக்குக் கொண்டு சேர்க்கும் வேலையை கதாநாயகன் வெற்றி பார்க்க துவங்கிறார்.
கதாநாயகி கிருஷ்ணபிரியாவை கதாநாயகன் வெற்றி சந்திக்கிறார்.
கண்டதும் அவர் மீது காதலில் விழு நாளடைவில் கதாநாயகன் வெற்றி மீதும் கதாநாயகி கிருஷ்ண பிரியாவிற்கு காதல் மலர்கிறது.
கோமல் குமாரின் கொடுத்த பணத்தை எடுத்துச் செல்லும் போது கதாநாயகன் வெற்றியின் வைத்திருந்த பணத்தை ஒருவர் கொள்ளையடித்துவிட, வில்லன் கோமல் குமாரின் கோபத்திற்கு ஆளாகிறார்
கதாநாயகன் வெற்றியின் தந்தை பிரபுவிற்க்கு, தெரியவர தன் செந்த வீட்டு பத்திரத்தை கொடுத்து விட்டு கதாநாயகன் வெற்றியை வில்லன் கோமல் குமாரிடம் இருந்து மீட்டு வருகிறார்.
இதன்பிறகு, கதாநாயகன் வெற்றியின் வாழ்க்கை என்னவானது இருவரின் காதலில் வெற்றி தமிழ்நாட்டில் என்ன பெற்றார்களா? வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த ராஜபுத்திரன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ராஜபுத்திரன் திரைப்படத்தில் கதாநாயகனாக வெற்றி நடித்திருக்கிறார்.
கதாநாயகன் வெற்றியின் எளிமையான நடிப்பையும், வெறித்தனமான உழைப்பையும் இந்த ராஜபுத்திரன் திரைப்படத்தில் காண முடிகிறது.
கதாநாயகன் வெற்றியின் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் அர்ப்பணிப்பை நன்றாகவே உணரவும் முடிந்தது.
மற்றொரு கதாநாயகனாக நடிகர் பிரபு கதையின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் பிரபு இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யார் இருக்கிறார் என்று கூறும் அளவிற்கு மிகவும் கனகச்சிதமாக தனது கதாபாத்திரத்தை மிக அருமையாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.
பல ஆண்டு பிறகு இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபு நடனமும் ஆடியிருக்கிறார்
இந்த ராஜபுத்திரன் திரைப்படத்தில் கதாநாயகியாக கிருஷ்ணபிரியா நடித்துள்ளார்.
கதாநாயகி கிருஷ்ணபிரியா தனது அறிமுக திரைப்படத்திலேயே அனைவரையும் வியந்து பாராட்டும்படி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்
இந்த ராஜபுத்திரன் திரைப்படத்தின் கதாநாயகி கிருஷ்ணபிரியா ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையிலும் மிரள வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோமல் குமார் லிவிங்க்ஸ்டன், ஆர் வி உதயகுமார், மன்சூர் அலிகான் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரமும் மிகவும் அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
தங்கதுரை மற்றும் கதாநாயகன் வெற்றி நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கணபதி என இருவருமே திரைப்படத்திற்கு மிகப்பெரும் பாலமாக உள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவு மூலம் இராமநாதபுர மாவட்ட அழகை அழகாக திரைப்படம் ஆக்கிருக்கிறார்.
இசையமைப்பாளர் எஐஎஸ். நௌஃபல் இசையில் பாடல்கள் ஆகாசத்த தொட்டாச்சி பாடல் ரசிக்கும்படியாக இருந்தது.
மற்றும் பின்னணி இசையில் தனி ஒரு சாம்ராஜ்யத்தை நிகழ்த்தியுள்ளார்.
தந்தை மகன் இருவருக்குமான பாசப் பிணைப்பை ஒரு வாழ்வியல் கலந்த திரைக்கதையோடு மிகவும் அழகாக நகர்த்திச் சென்று ஒரு தரமான திரைப்படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகா கந்தன்.
மொத்தத்தில் – ராஜபுத்திரன் அனைவரும் திரையரங்கில் சென்று கண்டுக்களிக்கக்கூடிய ஒரு திரைப்படம்.











