“உசுரே’ திரைப்பட விமர்சனம்
நடிகர் நடிகைகள்:- டீஜய் அருணாசலம், ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர், தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவநீதன் மெல்வின், ஜெயப்பிரகாஷ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- நவீன் டி கோபால்.
ஒளிப்பதிவாளர் :- மார்க்கி சாய் .
படத்தொகுப்பாளர் :- மணி மாறன்.
இசையமைப்பாளர் :- கிரண் ஜோஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீ கிருஷ்ணா ப்ரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- மவுலி எம் ராதாகிருஷ்ணா.
ரேட்டிங் :- 2.5./5.
அந்த ஊர் கல் குவாரியில் வேலை செய்யும் கதாநாயகன் டீஜே அருணாச்சலம் தன் தெருவில் தனது எதிர்வீட்டில் தங்கி இருக்கும் கதாநாயகி ஜனனியின் தாயார் மந்த்ரா அந்த ஊரில் எந்த ஒரு ஆம்பளையும் தனது மகளை ஏர் எடுத்துக் கூட பார்க்க கூடாது என பார்க்கும் ஆண்களை அடிப்பதும் என வேலையாகவே இருக்கும் தனது மகளை பாதுகாப்பு வருகிறார்.
கதாநாயகன் டீஜே அருணாச்சலம் கதாநாயகி ஜனனியை காதலிக்கிறார்.
இவர்கள் இருவரும் காதலிப்பது கதாநாயகி ஜனனியின் தாய் மந்த்ராவுக்குப் பிடிக்கவில்லை.
தனது காதலை கதாநாயகி ஜனனியிடம் கூறும்போது கதாநாயகன் டீஜே அருணாச்சலம் கதாநாயகி ஜனனியின் தாய் மந்த்ரா அதனால், கதாநாயகன் டீஜே அருணாச்சலம் செருப்பால் அடித்து விடுகிறார்
கதாநாயகி ஜனனியை அவருடைய தாய் மந்த்ரா இரவோடு இரவாக வெளியூருக்கு அனுப்பி விடுகிறார்.
கதாநாயகன் டீஜே அருணாச்சலம் தனது காதலி கதாநாயகி ஜனனியை தேடி கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த உசுரே திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த உசுரே திரைப்படத்தில் கதாநாயகனாக டீஜே அருணாச்சலம் நடித்திருக்கிறார்.
காதலுக்காக எதையும் செய்யத் துணியும் கதாபாத்திரத்தில் டீஜே அருணாச்சலம் பொருத்தமாக இருக்கிறார்.
ஆனால், காதலிக்காக அன்பான பெற்றோருக்கு கூடத் தெரியாமல் வீட்டுப் பத்திரத்தை வைத்துப் பணம் பெற்று கதாநாயகி ஜனனி தாய் மந்த்ராவிடம் தருவது காதல் ஆக்ஷன் காட்சிகள் அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
இந்த உசுரே திரைப்படத்தில் கதாநாயகியாக ஜனனி நடித்துள்ளார்.
கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜனனி இன்னும் கொஞ்சம் நடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
கதாநாயகி ஜனனியின் அந்தக் குழந்தைத் தனமான நடிப்பையும் ரசிக்கலாம்.
நடிகை மந்த்ரா வில்லி கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் டீஜே அருணாச்சலத்தின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தி குமாரி தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
கிரேன் மனோகர், நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தங்கதுரை மற்றும் ஆதித்யா கதிர் அனைத்து கதாபாத்திரங்கள் எடுத்திருக்கும் அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மார்க்கி சாய் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் :- கிரண் ஜோஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
காதலுக்கு இதுவரை எப்படியெல்லாமோ பிரச்சினைகள் வந்திருக்கின்றன.
வந்த பிரச்சினை வித்தியாசமானது.
காதலுக்கு எதிரான வித்தியாசமான விஷயத்தைப் பிடித்திருக்கிறார் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் நவீன் டி .கோபால்.
மொத்தத்தில் உசுரே மனதில் நிற்கவில்லை.











