‘ராயல் சல்யூட் ‘ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பிரதீப், அர்ச்சனா சிங், யுவா யுவராஜ், சுபாஷ் சிம்பு, அமரன் எம்ஜிஆர், இன்ப, ஜானி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜெய் சிவ சே.
ஒளிப்பதிவாளர் :- கணேஷ் முத்தையா.
படத்தொகுப்பாளர் :- ஆர் கே வி ஜெய்.
இசையமைப்பாளர் :- ஜெய் கிஷான்.
தயாரிப்பு நிறுவனம் :- மகிழ் மூவி மேக்கர்ஸ்.
தயாரிப்பாளர் :- சிவ கணேஷ்.
ரேட்டிங் :- 1.75./5.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் போரின் குண்டடி பட்டு உயிருக்குப் போராடும் மேஜர் யுவா யுவராஜை கதாநாயகன் சக்திவேல் தோளில் சுமந்தபடி உயிரைக் காப்பாற்ற போராடுகிறார்.
மேஜர் யுவா யுவராஜ் கண் திறப்பதும் பின்னர் மயங்குவதும்
இருக்க, அவரிடம் பேசிக் கொண்டே வருகிறான்.
இந்த நிலையில் மேஜர் யுவா யுவராஜ் காப்பாற்றுவது மிகவும் கடினம் என எண்ணி அவரை நடுவழியில் விட்டுவிட்டு ஓட, மனசாட்சிக்கு பயந்து அவருடைய மனைவி கதாநாயகி அர்ச்சனா சிங் மனசாட்சியாக தோன்றி
இது நியாயமா என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கிறாள் .
இந்த நிலையில் மீண்டும் மேஜர் யுவா யுவராஜியிடம் செல்கிறார் கதாநாயகன் சக்திவேல் ‘போரில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சக வீரனை உயிரோடு விட்டு வரக் கூடாது என்ற ராணுவ விதியைக்காட்டி மேஜர் யுவா யுவராஜ் சுட்டுத் தள்ள முயற்சிக்கிறார்.
கண் விழித்துப் பார்க்கும் மேஜர் யுவா யுவராஜ் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்த மேஜர் யுவா யுவராஜ் பார்த்த பதட்டத்தில் மீண்டும் கதாநாயகன் சக்திவேல்
ஓடுகிறார்
பதட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கதாநாயகன் சக்திவேல் புதைத்து வைத்திருந்த கன்னி வெடியில் கால் வைப்பதோடு, தன் உயிர் எப்படியாவது போய்விடும் என நினைக்கும் நேரத்தில்
பாகிஸ்தான் படை வீரான சுபாஷ் சிம்புவிடம் கதாநாயகன் சக்திவேல் துப்பாக்கி முனையில் சிக்கி கொள்கிறார்.
பாகிஸ்தான் படை வீரான சுபாஷ் சிம்புவை கன்னிவெடி
வெடியில் சிக்க வைக்க நினைக்கும் கதாநாயகன் சக்திவேல் அதன்பின்பு அவன் எதற்காக சாக வேண்டும் என எண்ணி பாகிஸ்தான் படை வீரான சுபாஷ் சிம்புவை நீ ஓடிவிடு உனது உயிரை காப்பாற்றிக் கொள் என எச்சரிக்கிறான்.
தனது உயிரைக் காப்பாற்ற நினைக்கும் கதாநாயகன் சக்திவேல் கூறியதைக் கேட்டு
மனம் நெகிழ்ந்த பாகிஸ்தான் படை வீரான சுபாஷ் சிம்பு கன்னி வெடியில் இருந்து கதாநாயகன் சக்திவேலை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென நினைக்கிறார்.
ஒரு பாகிஸ்தான் வீரர் தன்னை காப்பாற்றியதால் மனதளவில் பாதிக்கப்பட்டு கதாநாயகன் சக்திவேல் பாகிஸ்தான் வீரர் சுபாஷ் சிம்பு இருவரின் நட்புடன் பழகி ஒன்றாக பயணிக்கிறார்கள்.
யாரும் இல்லாத அந்த காட்டுக்குள் இருவரும் தனது சொந்த கதை சோக கதை தனது குடும்பக் கதையை இருவரும் பேசி பரிமாறிக் கொள்கிறார்கள்.
இந்த நேரத்தில் அவர்கள் இருவரையும் இந்திய ராணுவ அதிகாரி, சுற்றி வளைத்து பிடித்து விடுகிறார்கள்.
கதாநாயகன் சக்திவேலிடம் பாகிஸ்தான் படை வீரான சுபாஷ் சிம்புவை சுட்டுக் கொல்ல வேண்டும்’ என உத்தரவிடுகிறார்.
கண்ணு விடியிலிருந்து தனது உயிரை காப்பாற்றிய தனது நண்பன் பாகிஸ்தான் படை வீரான சுபாஷ் சிம்புவை
கதாநாயகன் சக்திவேல் சுட்டுக்கொன்றாரா? கொள்ளவில்லையா? என்பதுதான் இந்த ராயல் சல்யூட் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ராயல் சொல்லிட்டு திரைப்படத்தில் கதாநாயகனாக சக்திவேல் நடித்திருக்கிறார்.
நடிப்பு என்பது ஒரு கலை மொத்தத்தில் சுமாரான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த ராயல் சல்யூட் திரைப்படத்தில் கதாநாயக அர்ச்சனா சிங் நடித்திருக்கிறார்.
கதாநாயகி கதாபாத்திரம் திரைப்படத்திற்கு தேவை என்பதால் அர்ச்சனா சிங்கை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவருமே மிக மிக சுமாராகவே நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கணேஷ் முத்தையாவின் ஒளிப்பதிவு மிகவும் சுமாராக உள்ளது.
இசையமைப்பாளர் ஜெய் கிஷான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் முறையான இசையாக இல்லை சவுண்ட் அனைத்தும் இம்சையாக உள்ளது.
ஏதோ ஒரு கதை எடுத்துக் கொண்டு திரைக்கதை என்பது இல்லாமல் ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு விளையாட்டு தனமாக சிறு குழந்தைகள் விளையாட்டு போல் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஜெய் சிவ சே.
மொத்தத்தில் ‘ராயல் சல்யூட்’ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் அருமையாக உள்ளது.











