‘கப்புள் பிரண்ட்லி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சந்தோஷ் ஷோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி, ராஜீவ் கனகலா, லிவிங்ஸ்டன், கோபராஜு ரமணா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அஷ்வின் சந்திரசேகர்.

ஒளிப்பதிவாளர் :- தினேஷ் புருஷோத்தமன்.

படத்தொகுப்பாளர் :- கணேஷ் சிவா.

இசையமைப்பாளர் :- ஆதித்யா ரவீந்திரன்.

தயாரிப்பு நிறுவனம் :- UV கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- அஜய் குமார் ராஜு பி.

மக்கள் தொடர்பு :- சதீஷ் குமார் (S2 மீடியா).

ரேட்டிங் :-  3.5./5.

தமிழ்த் திரைப்பட உலகில் நீண்ட காலத்திற்குப் பிறகு மனதை  வருடும், காதலை உணர்வுகளை நுணுக்கமாக வடிவமைத்து கவிதையாக திரைப்பட ரசிகர்களை உணர வைத்திருக்கும் காதல் திரைப்படமாக ‘கப்புள் பிரண்ட்லி’ திரைப்படம் அமைந்திருக்கிறது.

காதல், மற்றும் மோதல்,குடும்ப உறவுகள், வாழ்க்கையில் நடக்கும் உறவு போராட்டம் ஆகியவற்றை மிகவும் இயல்பான முறையில்  காட்சிப்படுத்தி ரொமான்ஸ் அல்ல மென்மையான இது வெறும் வாழ்க்கையில் நடக்கும் தருணங்களை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கும் ஒரு உணர்ச்சி பூர்வமான பயணம்தான் இந்த ‘கப்புள் பிரண்ட்லி’ திரைப்படம்.

கதாநாயகன் சந்தோஷ் ஷோபன்,, வீடுகள் மற்றும் அலுவலர்களுக்கு இன்டீரியல் டெக்கரேஷன் செய்யும் படிப்பு படித்துவிட்டு சென்னையில்  காண்ட்ராக்ட் எடுத்து வேலை பார்த்து முன்னேற வேண்டும் என தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் கதாநாயகன் சந்தோஷ் ஷோபனின், வாழ்க்கை வறுமையுடன் வாழ்ந்து கொண்டு ரேபிட்டோ ஒட்டிக்கொண்டு தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சென்னையில் பெண்கள் தங்கம் விடுதியில் ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்து முன்னேற வேண்டும் என கதாநாயகி மானசா வாரணாசி, கனவோடு வேலைத் தேடிக் கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் ஒரே மன நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும்  கதாநாயகன் சந்தோஷ் ஷோபன், மற்றும் கதாநாயகி மானசா வாரணாசி, இருவரும் ஒரு இக்கட்டான சூழலில் சந்திக்கிறார்கள்.

வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகன்  சந்தோஷ் ஷோபனின், வாழ்க்கையில் கதாநாயகி மானசா வாரணாசி, வந்த பின்பு  கனவும் வாழ்வும் மேல் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

கதாநாயகன் சந்தோஷ் ஷோபன் மற்றும் கதாநாயகி மானசா வாரணாசி, இருவரும் லிவிங் டு கெதர் என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகன் சந்தோஷ் ஷோபன் மற்றும் கதாநாயகி மானசா வாரணாசி, இவர்கள் இருவரில் வாழ்வில் பிரகாசமான ஒளி படரும் நேரத்தில் இருவரின் வாழ்க்கையில் திடீரென ஒரு இருள் மேகம் இவர்கள் வாழ்வில் நுழைந்துகொள்ள  இவர்கள் வாழ்வில் இருந்து அந்த இருள் மேகம் கலைந்ததா?,  களையவில்லையா ?, என்பதுதான் இந்த கப்புள் பிரண்ட்லி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘கப்புள் பிரண்ட்லி’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக சந்தோஷ் ஷோபன் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக சந்தோஷ் ஷோபன் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்.

தெலுங்கு நடிகர் என்றாலும்  நமது சென்னை ஆளாக மனதிற்குள் ஒட்டிக்கொள்கிறார்.

இந்த ‘கப்புள் பிரண்ட்லி’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக மானசா வரணாசி நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மானசா வரணாசி கதாபாத்திரத்தை உணர்ந்து பேரதற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் மானசா வரணாசி நம்மை கண்குளிர ரசிக்க வைக்கும் அவரே பின்பாதியில் கண் நிறைந்து அழவும் வைத்திருக்கிறார்.

கதையின் நாயகன் சந்தோஷ் ஷோபன் மற்றும் கதையின் நாயகி மானசா வரணாசி  இருவரின் நடிப்பு மட்டுமல்லாமல் இருவரின் நடிப்பு மட்டு அல்லாமல் இருவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

யோகிபாபு வழக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

சுனில் ரெட்டி, ராஜீவ் கனகலா, லிவிங்ஸ்டன், கோபராஜு ரமணா, மற்ற அனைத்து கதாபாத்திரங்கள் எடுத்திருக்கும் அனைவரும் கதை திரைக்கதை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமன் ஒளிப்பதிவு மூலம் துளியும் எதார்த்தம் மீறாத காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்கள் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு மற்றொரு ஆத்மாவாக செயல்பட்டு இருக்கிறது.

படித்துவிட்டு இன்டீரியல் டெக்கரேஷன் துறையில் முன்னேற வேண்டும் என துடிக்கும் கதாநாயகன் ஐடி துறையில் முன்னேற வேண்டும் என இருக்கும் கதாநாயகி இருவரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து கதை திரைக்கதை அமைத்து மிக சிறப்பான ஒரு திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஷ்வின் சந்திரசேகர்.

மொத்தத்தில், இந்த ‘கப்புள் பிரண்ட்லி’ வருடும், காதலை உணர்வுகளை நுணுக்கமாக வடிவமைத்து கவிதையாக சொல்லி இருக்கும் திரைப்படம்.

error: Content is protected !!