’ஐ , நோபடி’ (I,Nobody) திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பிருத்விராஜ் சுகுமாரன, பார்வதி திருவோத்த, ஹக்கிம் ஷாஜகான், அசோகன்,, விஜயராகவன், மதுபால், சங்கர் ராமகிருஷ்ணன், நக்ஷத்ரா, lமற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- நிசாம் பஷீர்.
ஒளிப்பதிவாளர் :- தினேஷ் புருஷோத்தமன்.
படத்தொகுப்பாளர் :- ரமீஸ் எம்.பி..
இசையமைப்பாளர் :- ஜேக்ஸ் பிஜாய்.
தயாரிப்பு நிறுவனம் :– பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் & E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி.
மக்கள் தொடர்பு :- யுவராஜ்.
ரேட்டிங் :- 4./5.
சிட்டிக்குள் இருக்கும் வங்கியில் மூன்று நபர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.
கொள்ளையடிக்கப்படும் அந்த வங்கியில் இருக்கும் கதாநாயகன் பிரித்விராஜ் சுகுமாரனின் முகத்தை மூடி பிணைக் கைதியாக கொள்ளையர்கள் அழைத்துச் செல்கிறார்கள்.
நெடுஞ்சாலையில் கதாநாயகன் பிரித்விராஜ் சுகுமாரனை காரில் இருந்து இறக்கி விடும்போது, மூவரில் ஒருவரின் சட்டையில் உள்ள பேட்ச் ஆதாரத்தை கையில் சிக்குவதோடு, வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் விபத்தில் சிக்கி மூன்று நபர்களும் இறந்து விடுகிறார்கள்.
கதாநாயகன் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் யார் ? என்பதை கண்டுபிடிக்கும் காவல்துறையினர், கொள்ளையர்கள் விபத்தில் இறந்துவிட்டதால், அவர்கள் வங்கியில் கொள்ளையடித்த பணத்தை கைப்பற்ற முடியாமல் தவிக்கிறது.
இந்த நிலையில், அந்த வங்கியில் தனக்கும், தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கணக்கு இல்லாமல் உள்ளிட்ட எந்தவித தொடர்பும் இல்லாத கதாநாயகன் பிரித்விராஜ் சுகுமாரன் அங்கு சென்றதோடு, வங்கி ஊழியர்களிடம் எந்தவிதமான உதவியும் கேட்காமல் நெடுநேரமாக வங்கியில் அமர்ந்து இருந்தது ஏன் ? என்ற காவல்துறையினருக்கு கேள்வி எழுகிறது.
அந்த கேள்வியால் கதாநாயகன் பிரித்விராஜ் சுகுமாரனின் அந்த வங்கியில் நடந்த கொள்ளையில் சம்மந்தம் இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறது.
அதே சமயம், ஊடகங்கள் அந்த சந்தேகத்திற்கு கதை கதை மற்றும் தலைப்பதை அனைத்து வங்கியில் நடந்த கொள்ளை செய்தியை வெளியிடும் செய்திகளால், கதாநாயகன் பிரித்விராஜ் சுகுமாரன் மட்டும் இன்றி அவரது குடும்பத்தாருக்கும் மிகப்பெரிய அளவில் பல சிக்கல்கள் வருகிறது.
சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு போராடும் கதாநாயகன் பிரித்விராஜ் சுகுமாரன் செயல்கள் புதிய சிக்கல்களை உருவாக்கி, தப்பிக்க முடியாத அளவுக்கு பெரும் சிலந்திவலையில் அவரை சிக்க வைக்க, அதில் இருந்து அவரும்,
சிக்கல்களில் இருந்து கதாநாயகன் பிரித்விராஜ் சுகுமாரனின் குடும்பத்தாரும் இந்த சிக்கலில் இருந்து மீண்டார்களா?, மீளவில்லையா ?,
சம்மந்தமே இல்லாத அந்த வங்கிக்கு கதாநாயகன் பிரித்விராஜ் சுகுமாரன் சென்றது ஏன் ?,
வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் காவல்துறையின் கையில் கிடைத்ததா?, கிடைக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘ஐ , நோபடி’ (I,Nobody) திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஐ , நோபடி’ (I,Nobody) திரைப்படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் சுகுமாரன், நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் சுகுமாரன், ஆரம்பக் காட்சியில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் செல்லும் போதும் சரி, கொள்ளையர்களின் பிணைக் கைதியாக வீக்கமடைந்த கண்களோடு அறிமுகம் ஆகும் போதும் சரி, புரியாத புதிராக பல விசயங்களை தனது மெளனத்தின் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிந்திக்க வைத்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் சுகுமாரன், எதிரான சிக்கல்களில் இருந்து விடுபட ஒரு சாதாரண மனிதராக போராடுவதும், என தனது நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
இந்த ‘ஐ , நோபடி’ (I,Nobody) திரைப்படத்தில் கதாநாயகியாக பார்வதி திருவோத்து, நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பார்வதி திருவோத்து, கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக, இயல்பான நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஷன்கள் மூலம் சிறந்த நடிகையாக திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக்கிம் ஷாஜகானின் அமைதியான முகமும், தேடல் என நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.
ஜேக்கப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன், முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயராகவன், டி.எஸ்.பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சங்கர் ராமகிருஷ்ணன், வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுபால், பிரித்விராஜின் மூத்த மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜியா மற்றும் இளைய மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் திரைக்கதையின் பதட்டத்தை அதிகரிக்கும் வகையிலும், மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு மூலம், பேருந்தில் நடக்கும் சண்டைக்காட்சி, மின்தூக்கியில் நடக்கும் சண்டைக்காட்சி, ஒரு அறைக்குள் நடக்கும் சண்டைக்காட்சி என அனைத்துவிதமான சண்டைக்காட்சிகளையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு நிலை குலைக்காமல் பயணித்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.
கதையின் மையக் கருவாக வங்கி கொள்ளை சம்பவத்தை வைத்துக் கொண்டு ஆனால், வங்கியில் கொள்ளையடித்தவர்களை கொன்றுவிட்டு, அதற்கு பதிலாக சம்மந்தமே இல்லாத ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு, காட்சிக்கு காட்சி பதட்டத்துடனும் திருப்பம், நொடிக்கு நொடி திரில்லர் என மிக அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் நிசாம் பஷீர்.
மொத்தத்தில், ‘ஐ , நோபடி’ (I,Nobody) மிரள வைக்கும் கிரைம் திரில்லர் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள் என்பது உறுதி.











