புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன்  நடித்த பழம் பெரும் நடிகை புஷ்பலதா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.!

புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன்  நடித்த பழம் பெரும் நடிகை புஷ்பலதா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.!

தமிழ் திரைப்பட உலகில் 1960 மற்றும் 1970களில் தமிழ் தமிழ் திரைப்படங்களில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை புஷ்பலதா.

அவருக்கு தற்போது 87 வயதான இவர், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில்
சிகிச்சையும் எடுத்து வந்த சூழலில் திடீரென இன்று மாலை அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு திரைத்துறை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் தமிழ் திரைப்பட உலகில் 1960, 70களில் முக்கிய நடிகைகளில் ஒருவர் புஷ்பலதா.. இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் எனப் பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழிகளிலும் கூட அவர் பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும், நல்ல நல்ல கதாபாத்திரங்களிலும்  நடித்துள்ளார்.

1958ம் ஆண்டு செங்கோட்டைச் சிங்கம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

1963ம் ஆண்டு ஏ. வி. எம். ராஜன் நடிப்பில் வெளியான நானும் ஒரு பெண் திரைப்படத்தில் இவரும் நடித்திருந்தார்.

திரைப்படத்தின் படப்பிடிப்பில்  இருவரும் காதலித்த நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

1960களில் மற்றும் 1970களில் படுபிஸியாக இருந்த புஷ்பலதா, அதிக அளவில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

1980களில் அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

அவர் கடைசியாக 1999ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீபாரதி இயக்கத்தில் முரளி, நளினி உள்ளிட்டோர் நடித்திருந்த பூ வாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு திரைப்படத் துறையை விட்டு விலகியே இருந்தார்.

அவர் பிறகு மத ரீதியான நலப்பணிகளையும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே நடிகை புஷ்பலதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து வந்தார்.

இந்தச் சூழலில் சிகிச்சை பலனில்லாமல் அவர் இன்று மாலை உயிரிழந்தார்.

பழம்பெரும் நடிகையான புஷ்பலதா மறைவுக்கு  திரைப்படத்துறையினர்  இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.