‘ஜெயிலர் 2’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, ஜாக்கி ஷெராஃப், எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சூரஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, மாஸ்டர் ரித்விக், ஜதின் சர்னா, நமோ நாராயணா, பிஜோர்ன் சுர்ராவ் அன்னா ராஜன், பி. எல். தேனப்பன், ஜாபர் சாதிக், பதம் குமார், அபேக்ஷா போர்வால், தமிழ், சரவண வேல்பகவதி பெருமாள், கோட்டயம் நசீர்சுனில் சுகதா, சுஜித் சங்கர், ஹக்கீம் ஷாஜஹான், வினீத் தட்டில் டேவிட், ராமச்சந்திரன் துரைராஜ், பூர்ணா, ராஜேஷ் மாதவன், நோரா ஃபதேஹி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- நெல்சன்.
ஒளிப்பதிவாளர் :- விஜய் கார்த்திக் கண்ணன்.
படத்தொகுப்பாளர் :- ஆர். நிர்மல்.
இசையமைப்பாளர் :- அனிருத்.
தயாரிப்பு நிறுவனம் :- சன் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- கலாநிதி மாறன்.
மக்கள் தொடர்பு :- ரியாஸ் K அஹ்மத் , பாரஸ் ரியாஸ்.
வெளியீட்டு தேதி :- 15 அக்டோபர் அக்டோபர் 2026.
ரேட்டிங் :- 3.5./5.
ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகத்தில் வில்லன் விநாயகத்தையும் தனது மகன் வசந்த் ரவியை கொன்று விடுவதோடு ஜெயிலர் திரைப்படம் முடிந்து விடுகிறது.
ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தன்னுடைய மனைவி ரம்யா கிருஷ்ணன் மருமகள் மிர்னா, பேரன் மாஸ்டர் ரித்விக், அழைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் கோயம்புத்தூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை செய்து கொண்டு கதாநாயகன் ரஜினிகாந்த் குடும்பத்துடன் தலைமறைவாக மறைந்து வாழ்ந்து வருகிறார்.
ரோட்டில் அடித்துக் கொள்ளும் ரவுடிகளில் ஒருவன் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்களை, அடிப்பதற்காக எடுத்துக் கொண்டு போக முயல, அவனைத் சூப்பர்வைசராக வேலை செய்து கொண்டு இருக்கும் கதாநாயகன் ரஜினிகாந்த் தடுக்கிறார்.
இந்தப் பிரச்சினையால் நமோ நாராயணாவிடம் கதாநாயகன் ரஜினிகாந்த் கார் ஓட்டுனராக சிக்கிக் கொள்கிறார்.
கோயம்புத்தூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை பார்த்துக்கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வரும் கதாநாயகன் ரஜினிகாந்த் மீண்டும் முதல் பாகத்தில் உள்ள வில்லன் விநாயகனை கொன்றவனை பழி தீர்க்க வேண்டும் என வில்லன்கள் சுராஜ் வெஞ்சுரமூடு மற்றும் எஸ் ஜே சூர்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேடி வர இவர்கள் மூலம் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
கோயம்புத்தூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக பணிபுரிந்து கொண்டு எந்தவிதமான வம்பு தும்புகளுக்கு செல்லாமல் மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் கதாநாயகன் ரஜினிகாந்த் வில்லன்கள் சுராஜ் வெஞ்சுரமூடு மற்றும் எஸ் ஜே சூர்யா இவர்களிடம் இருந்து தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்றினாரா?, இல்லை குடும்பத்தை காப்பாற்றவில்லையா?, என்பதுதான் இந்த ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் கதாநாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் முதல் பாகத்திலும் சரி அதை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் சரி திரையில் தோன்றும் போது உருவாகும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.
அமைதியாகப் பேசுவது, ஒரு பார்வையிலேயே எதிரியை நிலைகுலையச் செய்வது, மெல்லிய புன்னகையுடன் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவது என சூப்பர் ஸ்டாருக்கே உரித்தான ஸ்டைல் காட்சிகளில் வெளிப்படுகிறது.
அதிரடியான காட்சிகளில் வெளிப்படும் வேகம் ஒருபுறம் என்றால், குடும்பத்தைச் சார்ந்த காட்சிகளில் வெளிப்படும் உணர்வுகள் மறுபுறம்.
வயதைத் தாண்டிய திரை ஆளுமை என்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு உதாரணமாகத் திகழ்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன், அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சுரமூடு மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், கிருத்திக் ரோஷன், விஜய் சேதுபதி, மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன், இடம்பெறும் பிரபல நட்சத்திரங்களின் சிறப்புத் தோற்றங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகின்றன.
நமோ நாராயணா நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்.
யோகி பாபுவின் நடிப்பு சிறப்பு.
மிர்னா, மாஸ்டர் ரித்விக், ஜதின் சர்னா, நமோ நாராயணா, பிஜோர்ன் சுர்ராவ் அன்னா ராஜன், பி. எல். தேனப்பன், ஜாபர் சாதிக், பதம் குமார், அபேக்ஷா போர்வால், தமிழ், சரவண வேல்பகவதி பெருமாள், கோட்டயம் நசீர்சுனில் சுகதா, சுஜித் சங்கர், ஹக்கீம் ஷாஜஹான், வினீத் தட்டில் டேவிட், ராமச்சந்திரன் துரைராஜ், பூர்ணா, ராஜேஷ் மாதவன், நோரா ஃபதேஹி, உள்ளிட்ட அனைவருக்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் திரைப்படத்தின் பிரமாண்டத்தையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கம்பீரமான திரை ஆளுமையையும் காட்சிகளின் வழியே அழகாக வெளிப்படுத்துவதில் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு கவனிக்கத்தக்கது.
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையில் பாடல்கள் தனது தனித்துவமான பின்னணி இசையால் திரையில் தீப்பொறி பறக்கச் செய்திருக்கிறார்.
‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, அதே பாணியில், முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே கதை தொடங்குகிறது.
இயக்குநர் நெல்சன், ஒரு சாதாரண குடும்பத் தலைவன் என்ற பிம்பத்திற்குள் கதையை நேர்த்தியாகக் கட்டமைத்திருக்கிறார்.
இதில், குடும்ப உறவு சார்ந்த தருணங்கள், மாஸ்’ காட்சிகள் மற்றும் கலகலப்பான நகைச்சுவை என அனைத்தும் கச்சிதமாக அமைந்துள்ளன. அதன் பிறகு வரும் ஒரு பிரம்மாண்டமான ‘எலிவேஷன்’ காட்சி, திரைப்படத்திற்கு முழு வேகத்தைக் கொடுக்கிறார் இயக்குநர் நெல்சன்.
மொத்தத்தில், ‘ஜெயிலர் 2’ மாஸ், ஆக்ஷன், நகைச்சுவை எனத் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்!











