’லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பவிஷ் நாராயண், நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, அஸ்வத், சௌந்தர்யா, ஆதித்யா கதிர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மகேஷ் ராஜேந்திரன்.
ஒளிப்பதிவாளர் :- பி.ஜி. முத்தையா.
படத்தொகுப்பாளர் :- என்.பி. ஸ்ரீகாந்த் .
இசையமைப்பாளர் :- ஃபாக்ஸ்ன்.
தயாரிப்பு நிறுவனம் :- சினிமா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் லிமிடெட் (Zinema Media & Entertainment Ltd.) மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூஷன் (Creative Entertainers & Distribution)
தயாரிப்பாளர்கள்:- தினேஷ் ராஜ், ஜி தனஞ்செயன்.
மக்கள் தொடர்பு :- ரேகா.
ரேட்டிங் :- 3.5./5.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கதாநாயகன் பவிஷ், நாராயணன், ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டு மாதம் மாதம் 40 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் தனக்கென்று ஒரு பைக் கூட வாங்காமல், தன்னுடைய தேவைக்கு தந்தை கே.எஸ்.ரவிகுமாரின் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதோடு, வாங்கும் சம்பளம் முழுவதையும் தந்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் கொடுத்து விட்டு தன்னுடைய செலவுக்கு கூட பணம் கேட்காத, ஒரு ஆச்சரியமான இளைஞராக வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் பவிஷ், நாராயணன், காதல் மட்டுமல்லாமல் தன் காதலி கதாநாயகி நாக துர்காவால், மிகப்பெரிய அளவில் கடன்காரானாக்கி, தனது தாய் தந்தை தங்கையை பிரிப்பதோடு, அவருடைய வேலையையும் பறி போய்விடுகிறது.
கதாநாயகி நாக துர்காவின் ஆடம்பரமான செலவுகளாலும், அக்கறை இல்லாத காதல் உறவாலும் உருக்குலைந்து போகும் கடன் மற்றும் குடும்பத்தை பிரியும் காரணத்தால் கதாநாயகன் பவிஷ், நாராயணன், தன்னுடைய காதலி கதாநாயகி நாக துர்காவின் காதலை முறித்துக் கொள்ள முடிவு செய்கிறார்.
கதாநாயகி நாக துர்காவிற்க்கு கதாநாயகன் பவிஷ், நாராயணன் தான், தனக்கு ஏற்றவர் என்ற முடிவில், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் மிக மிக உறுதியாக இருக்கிறார்.
கதாநாயகி நாக துர்காவின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பத்தை நிறைவேற்ற கதாநாயகன் பவிஷ், நாராயணன் ஒரு நிபந்தனை விதிக்கிறார்.
அதன்படி, நான்கு ஆண்டுகளாக நான் ஒரு காதலனாக உனக்கு நான் செய்ததை, கதாநாயகி நாக துர்கா கதாநாயகன் பவிஷ், நாராயணனுக்கு நான்கு மாதங்கள் செய்ய வேண்டும், அப்படி நீ செய்துவிட்டால் கதாநாயகி நாக துர்காவை நான் திருமணம் செய்துகொள்வதாகவும், அவரால் அது முடியாமல் போனால், அவர் தன்னை விட்டு விலகிவிட வேண்டும் என இதுதான் நிபந்தனை
என கூறுகிறார்.
கதாநாயகன் பவிஷ், நாராயணன் கூறிய நிபந்தனையை ஏற்று கொண்டு ஆண்களின் உலகத்துக்குள் பயணப்பட முடிவு செய்யும் கதாநாயகி நாக துர்கா, நான்கு மாதங்களில் நிபந்தனையை முடித்து வெற்றிகரமாக கதாநாயகன் பவிஷ், நாராயணனை கரம் பிடித்தாரா ? கரம் பிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக பவிஷ், நாராயணன் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் பவிஷ், நாராயணன், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே நடனம் மற்றும் நடிப்பில் தான் ஒரு நல்ல நடிகன் என்பதை நிரூபித்து விட்டார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் பவிஷ், நாராயணன், இந்த ‘லவ் ஓ லவ்’ இரண்டாவது திரைப்படம் என்பதால் நடிப்பில் முதிர்ச்சி தெரிவதோடு, நடனம் மட்டும் அல்ல நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள், காதலி மீதான கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் என அனைத்திலும் அளவாக நடித்து, காதலாலும் காதலியாலும் பாதிக்கப்பட்ட ஆண்களின் பிரதிபலிப்பாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் நடிகை நாக துரகா, நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை நாக துரகா, பக்கத்து வீட்டுப் பெண் போல் எளிமையாக இருந்தாலும், தமிழ் திரைப்பட ரசிகர்களை சட்டென்று கவரக்கூடிய கதாநாயகியாக இல்லையென்றாலும். நடனக் காட்சிகளிலும் நடிப்பிலும் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
கதாநாயகன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் செல்வராகவன், மகளிர் சங்க தலைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் ஆகியோரது திரை இருப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன். இசையில் பாடல்கள் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், மக்கள் மனதில் இடம் பிடிக்கும் பின்னணி இசை அளவாக பயணித்திருக்கிறார்.
தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள இளைஞர்களை குறிவைத்து எழுதப்பட்ட கதை என்றாலும், திரைக்கதையில் குடும்ப உறவுகளையும் இணைத்து அனைத்து வயதினருக்கும் ஏற்ற நாகரீகமான காதல் திரைப்படமாக இயக்கியிருகிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.
மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ திரைப்படம் குடும்பத்தோடு பார்க்க கூடிய நாகரீகமான காதல் கதை.











