’பூர்வீகம்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் – கதிர்,  மியாஶ்ரீ, போஸ் வெங்கட், இளவரசு, சங்கிலி முருகன், ஸ்ரீரஞ்சனி, சூசன், YSD சேகர், பசங்க சிவகுமார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – G. கிருஷ்ணன் Df Tech.

ஒளிப்பதிவாளர் – விஜய் மோகன் Df Tech.

படத்தொகுப்பாளர் – ஏகாதசி.

இசையமைப்பாளர் –  சாணக்யா.

தயாரிப்பு நிறுவனம் – பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி.

தயாரிப்பாளர் – டாக்டர் R முருகானந்த்.

ரேட்டிங் –  2.75./5.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த போஸ் வெங்கட் தனது ஒரே மகன் கதாநாயகன் கதிரை நன்றாக படிக்க வைத்து, அரசு அதிகாரியாக வேண்டும் என ஆசைப்படுவதோடு, மட்டுமல்லாமல் தன் உடன் பிறந்த அக்கா தங்கை மற்றும் சொந்தங்களை உதறிவிட்டு நகர வாழ்க்கையில் தனது மகன் கதாநாயகன் கதிரை ஈடுபடுத்த வேண்டும் என போஸ் வெங்கட் விரும்புகிறார்.

போஸ் வெங்கட் ஆசைப்படி, அவரது மகன் கதாநாயகன் கதிரை நன்றாக படித்து அரசு அதிகாரியாகி, வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செஈய்துக் வைத்து, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி கொண்டு வாழ்ந்து வருகிறார்.

போஸ் வெங்கட் நினைத்தபடி தன் மகன் கதிரின் வாழ்க்கை உயர்ந்துவிட்டாலும், ஒரு தந்தையாக போஸ் வெங்கட் தனது மகனின் நல்லது கெட்டது  பங்கேற்க முடியாமல் போவதோடு, தந்தை மற்றும் தாத்தா என உரிமையை உறவாட முடியாத நிலை ஏற்படுகிறது.

தனது தந்தையின் பூர்வீகத்தை விட்டுவிட்டு படிப்பு மற்றும் பணிக்காகவும் நகர வாழ்க்கையில் ஈடுபட்டு, தனது தாய் தந்தை மறக்கும் மனநிலைக்கு ஆளான கதாநாயகன் கதிர், மனம் மாறினாரா? மணம் மாறவில்லையா? என்பதுதான் இந்த ‘பூர்வீகம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பூர்வீகம் திரைப்படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் கதிர், இளைஞர் மற்றும் குடும்ப தலைவர் என இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பில் வேறுபாட்டை காட்டியிருப்பதோடு, தனது உணர்வுகளை நடிப்பின் மூலம் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த பூர்வீகம் திரைப்படத்தில் கதாநாயகியாக மியா ஸ்ரீ  நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மியா ஸ்ரீ குடும்ப பாங்கான முகத்தோடும், எளிமையான அழகோடும் கிராமத்து பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

அவரது வெகுளித்தனமான நடிப்பை கொடுத்து அவருடைய கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.

கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் போஸ் வெங்கட், நகர வாழ்க்கை மோகத்தால் மகனை படிக்க வைத்தாலும், அவர் தன்னிடம் இருந்து விலகும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை  கண்கலங்க வைத்துவிடுகிறார்.

கதாநாயகனின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  ஸ்ரீ ரஞ்சனியும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், சிவக்குமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விஜய் மோகன், கிராமத்து அழகையும், மக்களையும் எதார்த்தத்தையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சாணக்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கிராமத்து மண் மனம் மாறாமல் இனிமையாக இருக்கிறது.

பின்னணி இசை திரைக்கதை  ஓட்டத்திற்கு மிக அருமையாக பயணித்து இருக்கிறார்.

பூர்வீகத்தை விட்டுவிட்டு நகரத்திற்கு படிப்பிற்காகவும், தொழிலுக்காகவும் வரும்
இளைஞர்கள், தங்களது கலாச்சாரங்களையும், உறவுகளின் மேன்மைகளையும் மறந்து போகும் போது, வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஜி.கிருஷ்ணன்,

மொத்தத்தில், ‘பூர்வீகம்’ திரைப்படம் சொந்த மண் தான் சொர்க்கம் என்பதை மனதளவில் உணர உணர வைக்கிறது.

error: Content is protected !!