E1 திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சதாநாடார், மோனிகா செலினா, பாண்டி, குழந்தை-பேபிஷிவ், சுந்தரம் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சதா நாடார், மோனிகா செலினா.

ஒளிப்பதிவாளர் :- எம்.எஸ்.மனோகுமார்.

படத்தொகுப்பாளர் :- பரணிசெல்வம்.

இசையமைப்பாளர் :- இ.ஜே.ஜான்சன்.

தயாரிப்பு நிறுவனம் :- கப்பிள் கிரியேஷன்ஸ்.
.
தயாரிப்பாளர்கள் :- சதா நாடார், மோனிகா செலினா.

மக்கள் தொடர்பு :- சரண்.

வெளியீட்டு தேதி :- 09 அக்டோபர் 2026.

ரேட்டிங் :-  2.5./5.

கணவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட, தனது கைக்குழந்தையுடன் அடுக்குமாடி குடியிருப்பில் கதாநாயகி  மோனிகா செலினா தனியாக இருக்கிறார்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் ஒரு மர்ம நபர்  வீட்டுக்குள் நுழைகிறார்.

அதே வீட்டுக்குள் கொலை செய்யப்பட்ட ஒரு பிணம் இருக்கிறது.

கதாநாயகி  மோனிகா செலினா வீட்டுக்குள் இருக்கும் அந்த பிணம் மற்றும் வீட்டுக்கு நுழைந்த மர்ம நபரால் தலைகீழாக மாறுகிறது.

கதாநாயகி  மோனிகா செலினா வீட்டுக்குள் நபர் யார்? கொலை செய்யப்பட்டு வீட்டிற்குள் இருக்கும் பிணத்தின் பின்னணி என்ன? கதாநாயகி  மோனிகா செலினா குழந்தையும் மர்ம நபரிடம் இருந்து தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா?, என்பதுதான் இந்த E1 திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த E1 திரைப்படத்தில் கதாநாயகனாக சதா நாடார் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் நடித்துள்ள சதா நாடார், தனது   உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த E1 திரைப்படத்தில் கதாநாயகியாக மோனிகா செலினா, நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மோனிகா செலினா, தனிமையில் குழந்தையுடன் சிக்கித் தவிக்கும் பெண்ணின் பயம், பதற்றம், இயலாமை ஆகியவற்றை நடிப்பு மூலம் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் பாண்டி, சுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரம் பேபி ஷிவ் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை  வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர்  எம்.எஸ். மனோகுமார் ஒளிப்பதிவு மூலம் ஒரே வீட்டுக்குள் குறைந்த கதாபாத்திரங்களுடன் மிகவும் சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர்  இ.ஜே.ஜான்சன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

ஒரே வீட்டை மையமாக வைத்து, குறைந்த கதாபாத்திரங்களுடன் கதையை நகர்த்தியிருப்பது திரைப்படத்தின் தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்து, வெறும் 75 நிமிடங்களில் சஸ்பென்ஸ் குறையாமல் கதையைச் இயக்கியுள்ளார் இயக்குனர் சதாநாடார்.

மொத்தத்தில், ‘E1’  75 நிமிடங்களில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி, இறுதியில் சிந்திக்கவும் வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் நிறந்த சமூக அக்கறையுடன் கதையை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது.

error: Content is protected !!