பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மதன்பாப் காலமானார் !
பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மதன்பாப் காலமானார் !
சென்னை 02 ஆகஸ்ட் 2025 அவருக்கு தற்போது வயது 71. தமிழ், மலையாளம், தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் மதன்பாப் தனது தனித்துவமான சிரிப்பின் மூலம் ரசிகர்கள் சிரிக்க வைத்தார்.
சென்னையில் 1953 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் மதன்பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆகும்.
தேவர் மகன், பிரண்ட்ஸ், வில்லன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் மதன்பாப் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.
நடிகர் மதன்பாபின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.











