ஜப்பான் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75/ 5.
நடிகர் & நடிகைகள் :- கார்த்தி, அணு இமானுவேல், சுனில், ஜித்தன் ரமேஷ், K.S.ரவிக்குமார், S.D. விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், கௌசிக் மஹத்தா, பாவா செல்லதுரை, ராஜேஷ் அகர்வால், நவநீத், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராஜு முருகன்.
ஒளிப்பதிவாளர் :- எஸ்.ரவி வர்மன்.
படத்தொகுப்பாளர் :- பிலோமின் ராஜ்.
இசையமைப்பாளர் :- G. V. பிரகாஷ் குமார்.
தயாரிப்பு நிறுவனம்:- ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- S. R. பிரபு , S. R. பிரகாஷ் பாபு.
ரேட்டிங் :- 2.75/ 5.
இந்த 2023 தீபாவளியை முன்னிட்டு இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, நடிகை அனு இம்மானுவேல் நடிப்பில் ‘ஜப்பான்’ திரைப்படம் நவம்பர் 10 2023 முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில் இயக்குனர் ராஜு முருகனோடு ஜப்பான் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது..
கோவையில் உள்ள ராயல் ஜுவல்லரி என்ற மிகப்பெரிய பெரிய நகைக்கடையில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வைர கற்கள் மர்ம நபர் ஒருவரால் கொள்ளையடிக்கபடுகிறது.
இந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தை கதாநாயகன் கார்த்திதான் செய்திருப்பார் என்று காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கொள்ளையடிக்கப்பட்ட ராயல் ஜுவல்லரி நகைக்கடையில் உள்துறை அமைச்சர் கதாபாத்திரத்தில் வரும் கே.எஸ். ரவிக்குமாரும் பார்ட்னர் என்பதால் கொள்ளையர்களை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படும கதாநாயகன் கார்த்திக்கு ரத்தப் பரிசோதனையில் எச்ஐவி பாசிட்டி என ரிசல்ட் வருகிறது.
இதனால், தனக்கு எச் ஐ வி நோய் இருப்பதால் தான் கொள்ளையடித்த அனைத்து நகைகளையும் ஏழை எளிய மக்களுக்கு ரோட்டோரத்தில் அனாதையாக படுத்திருக்கும் அனைவருக்கும் நகைகளை கொடுத்து விடுகிறார்.
ஒரு கட்டத்தில் காவல்துறையினர் கதாநாயகன் கார்த்தி சிக்கிக் கொள்ள, கோவையில் ராயல் ஜுவல்லரியில் நடந்த அந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தை நான் செய்யவில்லை என்று மறுக்கிறார்.
இறுதியில் அந்த கோவையில் உள்ள ராயல் ஜுவல்லரியில் 200 கோடி ருபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் வைரங்களை கொள்ளையடித்தது யார்? கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா? காவல் துறையினிடமிருந்து கதாநாயகன் கார்த்தி தப்பித்தாரா? தப்ப வில்லையா? என்பதுதான் இந்த ஜப்பான் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஜப்பான் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த ஜப்பான் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, மிகவும் வித்தியாசமான தோற்றம், உடை, நடை என திரைப்படம் முழுவதும் மிகவும் அருமையாக பயணிக்கிறார்.
திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சியில் பெற்ற தாய் பற்றி சொல்லும் சென்டிமென்ட் காட்சியில் கதாநாயகன் கார்த்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
திரைப்படத்தில் இருக்கும் ஆக்சன் காட்சியில் சிறப்பாகவும் அருமையாகவும் முயற்சி செய்து இருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் நடிகர் கார்த்தியின் உடல்மொழி, அவரின் வசன உச்சரிப்பு ஆகியவை சுவாரஸ்யமாக இருந்தன.
இந்தத் ஜப்பான் திரைப்படத்தில் அணு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்து இருக்கும் அனு இம்மானுவேல் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து சொல்கிறார்.
வில்லனாகவும் துரோகம் செய்யும் நண்பனாகவும் நடித்து இருக்கும் ஜித்தன் ரமேஷ் நடிப்பின் மூலம் அசத்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக வரும் சுனில், மற்றும் ஒளிப்பதிவாளர் இயக்குனர் விஜய் மில்டன், ஆகியோர் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் ஒளிப்பதிவு கண்களுக்கு திபாவளி விருந்து படைத்து இருக்கிறது.
பட தொகுப்பாளர் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு அருமையாக இருக்கிறது.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் கதையோடு பயணித்து இருக்கிறார்.
பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து அதில் காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், அரசியல் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.
இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் ராஜூ முருகன்
கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்துக்கொண்ட கதைக்கு திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அதிக அளவில் மெனக்கெட்டு இருக்கலாம் என தோன்றுகிறது.
மேலும், இந்தத் திரைப்படத்தின் கதை, சில வருடங்களுக்கு முன்பாக திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் என்ற நீராவி முருகனின் கதை எனவும் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் ஜப்பான் திரைப்படத்திற்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு திரைப்படத்திற்கு செல்லலாம் என நினைப்பவர்கள் ஜப்பான் திரைப்படத்துக்கு கண்டிப்பாக விசிட் அடிக்கலாம்.