லைசென்ஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75/ 5.

நடிகர் & நடிகைகள் :- ராஜலட்சுமி, ட்த்தஓ ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :-  கணபதி பாலமுருகன்.

ஒளிப்பதிவு :- காசி விஸ்வநாதன்.

படத்தொகுப்பாளர் :- வெரோனிகா பிரசாத்.

இசையமைப்பாளர் :- பைஜூ ஜேக்கப்.

தயாரிப்பு நிறுவனம் :- JRG புரடக்சன்ஸ்.

தயாரிப்பாளர் :- N.ஜீவானந்தம்.

ரேட்டிங் :- 2.75/ 5.

ஒரு கிராமத்தில் காவல்துறை சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ராதாரவியின் மகள் கதாநாயகி ராஜலட்சுமி, சிறு வயதில் இருந்து சமூகத்தில் நடக்கும் பெண்களை வன்கொடுமை செய்பவர்களை சிறுவயதில் இருந்து தட்டி கேட்கும் சமுக போராளியாகவும் தைரியசாலியாகவும் வளர்ந்து வருகிறார்.

இவர் காவல்துறையின் சேர்ந்து மிகப்பெரிய காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவுடன் கதாநாயகி ராஜலட்சுமி வாழ்ந்து வருகிறார்.

ஆனால், ஏதோ ஒரு சில காரணங்களால் கதாநாயகி ராஜலட்சுமியின் கனவு நிறைவேறாமல் போக ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த சமுதாயத்தில் நடக்கும் பெண்கள் மீது நடக்கும் பல விதமான தவறுகளை கதாநாயகி ராஜலட்சுமி தட்டி கேட்பதால் கதாநாயகி ராஜலட்சுமிக்கு பல எதிர்ப்புகள் வருகிறது.

இந்த நிலையில் பெண்களுக்கு பல பிரச்சனைகள் வருவதால் ஒவ்வொரு 18 வயது நிரம்பிய பெண்களுக்கு துப்பாக்கி தேவை லைசென்ஸ் வேண்டும் என்று அரசாங்கத்திடம் என்று மனு கொடுக்கிறார்.

இதற்கு பிறகு பல விதமான காவல்துறை விசாரணைகளுக்கு பின் காவல்துறை கமிஷனர் துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்க முடியாது என கூறிவிடுகிறார்கள்.

இறுதியில் தனக்கு லைசென்ஸ் வழங்க முடியாது என்பதால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறார் கதாநாயகி ராஜலட்சுமி.

இறுதியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் கதாநாயகி ராஜலட்சுமிக்கு துப்பாக்கி லைசென்ஸ் கிடைத்ததா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த லைசன்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த லைசன்ஸ் திரைப்படத்தில் பிரபல பின்னணி பாடகி ராஜலட்சுமி செந்தில் கணேஷ் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.

சமுதாயத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தட்டி கேட்கும் வீரப் போராளியாக கதாநாயகி ராஜலட்சுமி மிகவும் அருமையாக அசத்தியிருக்கிறார்.

கதாநாயகி ராஜலட்சுமியின் நடிப்பு கண்டு அரங்கமே கைத்தட்டி ரசிக்கிறது.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் கதாநாயகி ராஜலட்சுமி, திரைப்படத்தின் கதைக்கு ஏற்ற தேர்வு போல் உள்ளது.

பிரச்சனைகளை சந்திக்கும் போது இறுக்கமான முகத்துடன் அநியாயங்களை தட்டி கேட்கும் காட்சிகளில் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார்.

கதாநாயகி ராஜலட்சுமியின் ஒப்பனை மிகவும் கேவலமாகவும் மட்டமாகவும் இருக்கிறது.

கதாநாயகி ராஜலட்சுமியின் கணவராக வருபவருக்கு அதிகளவில் வேலை இல்லை.

கதாநாயகி ராஜலட்சுமியின் தந்தையாக வரும் ராதாரவி, அனுபவம் கலந்த நடிப்பை கொடுத்து திரைப்படத்தின் கதைக்கு மெருகேற்றி இருக்கிறார்.

சிறுவயது கதாநாயகி ராஜலட்சுமி வரும் அயலி அபிநக்சத்திரா சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்.

படத்தொகுப்பாளர் வெரோனிகா பிரசாத் படத்தொகுப்பு மிக அருமை.

இசையமைப்பாளர் பைஜு ஜேக்கப் இசை மற்றும் பின்னணி இசை பாடல்கள் பெண்ணுரிமை குறித்து விழிப்புணர்வு பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

நல்ல கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் கணபதி பாலமுருகன் நல்ல ஒரு திறமையான திரை கதையை அமைத்திருந்தால் மிகப் பெரிய அளவில் நல்ல ஒரு திரைப்படமாக அமைந்திருக்கும்.

பெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஒரு விழிப்புணர்வு திரைப்படமாக லைசென்ஸ் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கணபதி பாலமுருகன்.

நல்ல கதை என்றாலும், அதை சொல்ல வந்த விதத்தில் சிறிது தடுமாறி இருக்கிறார் இயக்குனர் கணபதி பாலமுருகன் காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் திரைக்கதை செல்வது திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலவீனமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் இந்த லைசென்ஸ் பெண்களுக்காக போராடும் ஒரு திரைப்படம் கண்டிப்பாக பார்க்கலாம்.