ரெட் சாண்டல் வுட் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3./5.
நடிகர் & நடிகைகள் :- வெற்றி, தியா மயூரி, KGF ராம், MS பாஸ்கர், கணேஷ் வெங்கட் ராமன், கபாலி விஸ்வநாத், வினோத் சாகர், மாரிமுத்து, ரவி வெங்கட் ராமன், அபி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- குரு ராமானுஜம்.
ஒளிப்பதிவு :- சுரேஷ் பாலா.
படத்தொகுப்பு :- ரிச்சர்ட் கவின்.
இசையமைப்பாளர் :- சாம் சி எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- ஜெ என் சினிமாஸ்.
தயாரிப்பாளர் :- . ஜெ.பார்த்தசாரதி.
ரேட்டிங் :- 3./5.
கதாநாயகன் வெற்றி சென்னையில் வசித்து வருகிறார்.
இவரது நண்பர் விஸ்வநாத் படித்து முடித்துவிட்டு வேலைக்காக ஒவ்வொரு கம்பெனியாக இன்டர்வியூக்கு சென்று வருகிறார்.
பல கம்பெனிகள் இன்டர்வியூக்கு சென்று வேலைக்கு எவ்வளவு முயற்சி செய்தும் வேலை கிடைக்காததால் அவரது அப்பா உறவினர் ஒருவர் வீட்டிற்கு விஸ்வநாத்தை அனுப்பி வைக்கிறார்.
ஒரு நாள் விஸ்வநாத் காணாமல் போகவே அவரது உறவினர் விஸ்வநாத்தின் அப்பாவுக்கு போன் செய்து அவர் திருப்திக்கு செம்மர வெட்டும் வேலைக்கு சென்று விட்டதாக கூறுகிறார்
இது ஒருபுறம் இருக்க போய் கொண்டிருக்க விஸ்வநாத்தின் அப்பாவிற்கு வங்கி கணக்கில் இரண்டு மூறை 49000 ஆயிரம் பணம் செலுத்தப்படுகிறது.
இதனால் சந்தேகம் ஏற்பட்ட கதாநாயகன் வெற்றி இதனை துருப்பு சீட்டாக வைத்து கொண்டு தனது நண்பன் விஸ்வநாதை ஆந்திரா மாநிலத்தில் உள்ள ரேணிகுண்டா என்ற ஊருக்கு தேடிச் செல்கிறார்.
அங்கு சென்று பார்த்தால் இதுபோன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் இந்த செம்மர வெட்டும் வேலையில் மாட்டிக் கொண்டிருப்பது தெரிய வருகிறது.
இறுதியில் கதாநாயகன் வெற்றி தன் நண்பன் விஸ்வநாதை கண்டுபிடித்தார்? கண்டு பிடிக்கவில்லையா? தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எப்படி செம்மர கடத்தலில் மாட்டிக் கொண்டார்கள்? என்பதுதான் இந்த ரெட் சாண்டல் வுட் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ரெட் சாண்டில் வுட் திரைப்படத்தில் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்திலும் தேவையான நடிப்பை அளவாக கொடுத்து கவர்ந்துள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றி
நண்பனை தேடி செல்வது, செம்மர கடத்தலில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டெடுப்பது என கதாபாத்திரத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளார்.
நாயகன் வெற்றிக்கு நண்பனாக வரும் விஸ்வநாத், அருமையாக நடித்து இருக்கிறார்.
இந்த ரெட் சாண்டில் வுட் திரைப்படத்தில் தியா மயூரி கதாநாயகியாக நடித்துள்ளார்.
கதாநாயகியான தியா மையூரி குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் அளவான வந்து அழகான நடிப்பால் கவர்கிறார்.
வில்லனாக வரும் ‘கே.ஜி.எப்’ ராம் கதாபத்திரத்தை மிரள வைத்துள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்தும் கேட்கும் ரகம்.
2015 – 2016-ஆம ஆண்டு செம்மரம் வெட்டும் வேலைக்கு செல்வாதாக சொல்லி விட்டு திருப்பதி வனப்பகுதிக்கு சென்ற 20 தமிழர்கள் ஆந்திர காவல்துறை சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் குரு ராமானுஜம்.
தேவையான காட்சிகளை மட்டும் கொடுத்து படத்தை சிம்பிளாக என்னதான் ரசிக்கும் படியாக இருந்தாலும் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற விறுவிறுப்பு இல்லாமல் இருப்பது சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் ரெட் சாண்டல் வுட் – திரைப்படத்தை ஒருமுறை கண்டிப்பாக பாக்கலாம்.











