மாம்பாட்டம் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஜீவன், மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வி.சி வடிவுடையான்.

ஒளிப்பதிவாளர் :- இனியன் J ஹாரீஸ்.

படத்தொகுப்பாளர் :- சுரேஷ் அர்ஸ்.

இசையமைப்பாளர் :- அம்ரிஷ்.

தயாரிப்பு நிறுவனம் :- வைத்தியநாதன் பிலிம் கார்டன்.

தயாரிப்பாளர் :- V.பழனிவேல்.

இந்த பாம்பாட்டம் திரைப்படத்தின் கதை சுதந்திரத்திற்கு முன்னால் நடக்கிறது.

ராணி மகாதேவி மல்லிகா ஷெராவத் தனது சமஸ்தானத்தை ஆட்சி செய்து வருகிறார்.

அந்த சமயத்தில் சமஸ்தானத்தின் ஜோசியர் ராணி மகாதேவி மல்லிகா ஷெராவத் பாம்பு கடித்து இறந்து விடுவீர்கள் என்று கூறுகிறார்.

இதனால் அந்த சமஸ்தானத்தின் சுற்றி உள்ள அனைத்து கிராமத்தில் உள்ள பாம்புகளையும் கொள்ளு மாறு உத்தரவிடுகிறார் ராணி மகாதேவி மல்லிகா ஷெராவத்.

சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் பிடிக்கப்பட்டு அதிலிருந்து ஒரு கொடிய பாம்பு தப்பித்து ராணி மகாதேவி மல்லிகா ஷெராவத் கொன்று விடுகிறது,

மேலும் ராணி மகாதேவி மல்லிகா ஷெராவதின் மகளுக்கும் இதே போல் பாம்பு கொத்தி பிறக்கும் ஆபத்து உள்ளது என்று ஜோசியர் கூறுகிறார்.

இதனால் அவர்கள் அந்த நாட்டை விட்டு ராணி மகாதேவி மல்லிகா ஷெராவத் மற்றும் தந்தையும் வெளியேறுகின்றனர்.

அதன் பின்பு ராணி மகாதேவி மல்லிகா ஷெராவதின் ஆவி அந்த அரண்மனையை சுற்றுவதாக ஊர் முழுக்க மக்கள் பேசப்படுகிறது.

இந்நிலையில் இதனை விசாரிக்க காவல்துறை அதிகாரியான கதாநாயகன் ஜீவன் வருகிறார்,

அதன் பின்பு அரண்மனையில் உள்ள ஆவி உண்மையா? உண்மை இல்லையா? அதை கதாநாயகன் ஜீவன் கண்டுபிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த பாம்பாட்டம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் பாம்பாட்டம் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜீவன் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ஜீவன் அப்பா மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கதாநாயகன் ஜீவன் காவல்துறை அதிகாரியாக அவர் வரும் அனைத்து காட்சிகள் மிக அருமையாக எடுக்கப்பட்டு இருக்கிறது.

ராணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மல்லிகா ஷெராவத் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் சுமன், ரித்திகா சென், லிவிங்ஸ்டன், சரவண சக்தி பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோரும் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ ஹாரிஸின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளும் அருமையாக திரைப்படம் ஆக்கி இருக்கிறார்..

இசையமைப்பாளர் அம்ரிஷ் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்தைக் காப்பாற்றி இருக்கிறார்.

இரண்டு மணி நேரம் பத்து நிமிடம் மட்டுமே இருக்கும் இந்த கதையில் இன்னும் சில காட்சிகளை வெட்டி எறிந்து இருக்கலாம் விட்டிருந்தால் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கும்.

திரைப்படம் முழுக்கவே நிறைய காட்சிகளில் சிஜி காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

அவை ஒரு சில காட்சிகளில் நன்றாக இருந்தாலும் நிறைய காட்சிகளில் சிஜி மிகவும் மட்டமாக இருக்கிறது.

சிறிய பட்ஜெட் திரைப்படம் என்பதால் சிஜி காட்சிகளுக்கு அதிக அளவில் செலவு செய்யப்படவில்லை. என் நினைக்கத் தோன்றுகிறது.

சி ஜி விஷயத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்தி இருந்தால் நல்ல பிரம்மாண்டமான திரைப்படமாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில் பாம்பாட்டம் சுமாரான திரைப்படம்.

error: Content is protected !!